• Breaking News

    கார்ப்ரேட்டில் பணிபுரியும் இந்திய அதிகாரிகளில் 63% பேர் பருமனாக உள்ளதாக ஆய்வில் தகவல்..!



    சமீபத்தில் ஃபிட் இந்தியா  என்ற இயக்கம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. அதன் மூலமாக மேற்கோள் காட்டப்பட்ட ஆய்வில் இந்திய கார்ப்ரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் அதிகாரிகளில் 63 சதவீதம் பேர் உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    இந்த ஆய்வில் இந்தியாவில் ஐடி துறை , வங்கிகள் , மார்கெட்டிங் போன்ற துறைகளில் பணி புரியும் 60,000 ஊழியர்களின் உணவுப் பழக்கத்தை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை HealthifyMe என்ற பிரபல ஆப் நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த ஆய்வை ஒரு வருடமாக இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூர், கொல்கத்தா, டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடத்தியுள்ளது.

    அதில் இந்தியாவின் கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் 63 சதவீதத்தினர் அதிக உடல் எடைக் கொண்டவர்களாக இருப்பதாக உறுதி செய்துள்ளது. அதாவது உலக சுகாதார அமைச்சகத்தின்படி ஆரோக்கியமான மனிதர்களின் எடை என்பது ( body mass index (BMI) ) 18.5 முதல் 24.9 ஆக இருக்க வேண்டும். 25 க்கு மேல் இருப்பவர்கள் அதிக எடைக் கொண்டவர்கள் என குறிப்பிடுகிறது. இந்தக் கணக்கீடு அவர்களுடைய மார்பக அளவு ,  உயரம் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 63 சதவீதம் இந்திய அதிகரிகளின் BMI, 23 க்கு மேல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் அதில் அவர்கள் போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதே பெருங்காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக நுகர்வோர் பொருட்கள் தொழிலில் இருப்போர் ஒரு நாளைக்கு 5,988 அடிகள் நடக்கிறார்கள் எனில் நிதித்துறையில் பணி செய்வோர் 4,969 அடிகள்தான் நடப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிதித் துறையில் இருப்போர்தான் அதிக உடல் உழைப்பு இல்லா வேலையைச் செய்வதாகவும் குறிப்பிடுகிறது. இதுவே விடுமுறை நாட்களில் இன்னும் மோசமாக வீட்டிலேயே எந்த வேலையும் செய்யாமல் ஓய்வு மட்டுமே எடுப்பதாக கூறியுள்ளது.

    எனவே..வாழ்க்கையின் பாதியை அலுவலகத்தில் கழிக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் குறைந்தது நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சிகளையாவது மேற்கொள்வது அவசியம் என்று ஆய்வு நடத்திய நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.