Ticker

6/recent/ticker-posts

போட்டி ஆரம்பம் – தல 60 படத்திற்கு போட்டியாக தளபதி 64 பட டைட்டில் .!



தல 60 படத்தின் பூஜை முடிந்து படத்தின் பெயர் “வலிமை” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ட்ந்து வலிமை பட இயக்குனர் வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை படம் அடுத்த தீபாவளிக்கு வெளியாகும் மோதுறவாக மோதலாம் என்று பதிவிட்டு இருந்தார்.
இதன் பிறகு, தளபதி 64 படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட முடிவெடுத்து உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
பொதுவாகவே தளபதி படத்தின் பெயர் படப்பிடிப்பின் இறுதியில் தான் படக்குழு இதுவரை வெளியிட்டு வந்து உள்ளது.
ஆனால், இந்த முறை தளபதி 64 படக்குழு படத்தின் தலைப்பை வெளியிட யோசித்து வருகிறதாம். தளபதி 63 பிகில் படம் முடிந்த உடன் தளபதி 64 படம் தொடங்கிவிட்டது.
பிகில் படத்தின் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் இருக்கும் போதே தளபதி 64 படத்தின் தகவலை வெளியிட்டு ரசிகர்களை அதிக மகிழ்ச்சி படுத்தியது தளபதி 64 படக்குழு.
இதனை தொடர்ந்து, பிகில் படம் கொண்டத்தின் போது தளபதி 64 படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.