• Breaking News

    50% பெண்கள் காதல் தோல்வியுற்றால் பேக்அப் துணை வைத்திருப்பதாக ஆய்வில் தகவல்



    எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு இரண்டாவது ஆப்ஷன் வைத்துக்கொள்வது எப்போதும் உதவும் என்பார்கள். ஆனால் இந்த ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கை சற்று சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அதாவது பெண்கள் தற்போதைய காதல் அல்லது திருமணம் தோல்வியுற்றால் அதற்கு பேக்அப்பாக துணையை வைத்திருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

    டெய்லி மெயில் செய்தியின்படி, இங்கிலாந்தில் காதலிக்கும் மற்றும் திருமண உறவில் இருக்கும் 1000 பெண்களிடம் இந்த அய்வு நடத்தப்பட்டுள்ளது.

    ஒன்போல்.காம் (OnePoll.com) நடத்திய இந்த ஆய்வில்; பேக்அப் ஆண்களை, தாங்கள் வேலைக்குச் செல்லும் இடத்திலும், உடற்பயிற்சிக் கூடம் என தினமும் செலவழிக்கும் இடங்களில் நம்பகத் தன்மையான நபரை தேர்வு செய்வதாக கூறியுள்ளனர். இவற்றை விட அவர்களின் முன்னாள் காதலருடனும் பாதுகாப்பிற்காக பழகுவதாகக் கூறியுள்ளனர்.

    இந்த ஆண்கள் தற்போதையக் காதலன் அல்லது கணவரைக் காட்டிலும் உணர்வு ரீதியாக நல்ல துணையாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அதாவது 10 பெண்களில் 5 பேர் தற்போதைய துணையைக் காட்டிலும் அவர்கள் மன வருத்தத்தில் இருந்தாலும், நெருக்கடிகளில் இருந்தாலும் உதவுவதாகக் கூறியுள்ளனர். இதனால் தற்போதைய துணையைக் காட்டிலும் அவர்களிடம்தான் தைரியமாக உணர்வதாகக் கூறியுள்ளனர். மேலும் இப்படி பேக்அப் துணை வைத்துக்கொள்வதுதான் இன்னும் அவர்களுக்கு பலத்த நம்பிக்கையை அளிப்பதாகக் கூறியுள்ளனர்.
    இதனால் கணவரிடம் , துணையிடம் சில உதவிகளை நாடி அவர்கள் செய்யாதபோதோ, கைவிடும்போதோ இந்த பேக்அப் துணைதான் உதவுதாகக் கூறியுள்ளனர்.