• Breaking News

    திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரியின் 3 மாணவர்கள் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா பயணமாகவுள்ளனர்


    திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரியின் மூன்று மாணவர்கள் எதிர்வரும் 13ம் திகதி சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா பயணமாகவுள்ளனர்.இலங்கையிலிருந்து 16 மாணவர்கள் கொண்ட குழுவினர் இப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

    அதில் இருவர் வடமாகாணத்திலிருந்தும்,இம்மூவரும் கிழக்கு மாகாணத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஏனைய 11 மாணவர்களும் தென் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் 14ம்,15ம்,16ம் திகதிகளில் இந்தியாவின் லக்னோவில் போட்டிகளில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் எதிர்வரும் 17ம் திகதி தாயகம் திரும்பவுள்ளனர்.இவர்களுடன் ஆசிரியர் திரு.எஸ்.தவராஜா அவர்களும் செல்லவுள்ளார்.

    இம்மாணவர்களான 
    செல்வன்.ஶ்ரீ.ஶ்ரீரக்‌ஷன்-தரம்-10,
    செல்வன்.எம்.ஏ.முகமட் ஆதிப் -தரம்-8,
    செல்வன்.தி.சமில்டன்-தரம்-8 
    ஆகியோருக்கு போட்டியில் வெற்றிபெற்று சாதனையுடன் நாடுதிரும்ப எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.