• Breaking News

    இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான T20 போட்டி இன்று | Trincoinfo


    சுற்றுலா இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. லாகூரில் இந்த போட்டி மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
    தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை வெற்றிக் கொண்டுள்ள நிலையில், உலகில் முதல்நிலை T20 அணியான பாகிஸ்தானை இலங்கை கிரிக்கெட் அணி இளம் வீரர்களுடனேயே தோற்கடித்து சாதனை வெற்றி ஒன்றினை பதிவு செய்திருப்பதால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சமூக வலைதளமான டுவிட்டரில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் காணப்படுகின்றது.

    நீண்டகால காத்திருப்புகளின் பின்னர் இலங்கை அணியில் வாய்ப்பினை பெற்றுக்கொண்ட பானுக்க ராஜபக்ஷ தனது அதிரடி துடுப்பாட்டம் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் கன்னி அரைச்சதத்தை பதிவு செய்திருந்ததோடு, இலங்கை அணியின் வெற்றியினையும் உறுதி செய்ய பிரதான காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.