• Breaking News

    2020 ரி-20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதியை பெற்ற நமீபியா, நெதர்லாந்து


    நமீபியா அணி இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறுவது இதுவே முதன் முறையாகும். 

    அவுஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டிகள் நடக்கின்றன. 
    இதில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை இருபதுக்கு -  20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் 9 இடங்களில் இருந்த பாகிஸ்தான், இந்தியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

    தகுதிச்சுற்று மூலம் 6 அணிகள் தகுதிபெறும்.
    தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தன. இதில் நேற்றுமுன்தினம் நடந்த ஆட்டத்தில் நமிபியா அணியும், நெதர்லாந்து அணியும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் வென்று உலகக் கிண்ணத் தொடரில் இடம் பிடித்துள்ளன.