Ticker

6/recent/ticker-posts

ஆசியாவில் 200 குழந்தைகளிடம் அத்துமீறிய கொடூரன்... சிறையில் மர்ம கொலை! | Trrincoinfo



பிரித்தானியாவின் மோசமான குழந்தை பாலியல் குற்றவாளி சிறையில் மர்மமான முறையில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த ரிச்சர்ட் ஹக்கிள் (33) தன்னுடைய 19 வயதில், ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவராக இந்தியா, மலேசியா மற்றும் கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவில் ஆங்கிலம் மற்றும் புகைப்படம் கலைஞராக பணியாற்றி வந்தார்.
அவர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் அனாதை இல்லங்களில் தங்கி பல ஆண்டுகள் கழித்தார். அந்த சமயங்களில் 6 மாத குழந்தை உட்பட 16 வயதிற்குட்ட பல சிறார்களை தனது பாலியல் வேட்டையில் ஈடுபடுத்தியுள்ளார்.
அவை அனைத்தையும் படங்களாக எடுத்து கருப்பு இணையத்தில் பணத்திற்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதனை 2014ம் ஆண்டு அவுஸ்திரேலிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பொலிஸாரால் அவரை கைது செய்ய முடியவில்லை. 2015ம் ஆண்டு ஒருமுறை தன்னுடைய குடும்பத்தை சந்திப்பதற்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளார். அப்போது தன்னுடைய தவறுகள் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களுடைய மகனை பிடித்து செல்லுமாறு பொலிஸாரிடம் கெஞ்சியுள்ளனர். அதன்பிறகு கைது செய்யப்பட்ட ரிச்சர்ட் ஹக்கிள், எட்டு ஆண்டுகளில் துஸ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை மற்றும் ஒரு குழந்தையுடன் பாலியல் செயல்பாடு உள்ளிட்ட முன்னெப்போதும் இல்லாத 71 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
ஆனால் அதன்பிறகு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் 191 பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டிருப்பதும், 2014ம் ஆண்டு அவுஸ்திரேலிய பொலிஸார் கண்டறியாமல் இருந்திருந்தால் அதன் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் பிரித்தானியாவின் மோசமான குற்றவாளிகளை அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையில், ரிச்சர்ட் ஹக்கிள், அக்டோபர் 13ம் திகதியன்று மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவருடைய அறையில் இருந்த சக குற்றவாளி தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை ஆரம்பித்திருப்பதாக கூறியுள்ளனர்.