• Breaking News

    இந்தியன்-2 வில் கமல் கெட்டப் இதுதான் - லீக்கான புகைப்படம்


    இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. பல தடங்கள்களுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகம் பெற்றுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகவர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
    இப்படத்தில் கமல்ஹாசன் மேக்கப் சரியாக இல்லாததால் படப்பிடிப்பு முதலில் நிறுத்தப்பட்டது. தற்போது கமலின் முகத்திற்கு ஏற்றார் போல் மேக்கப் மாற்றப்பட்டுள்ளது. எனவே, இந்தியன் 2வில் கமல்ஹாசனின் கெட்டப் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
    இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் லீக் ஆகியுள்ளது. இதன் மூலம் கமல்ஹசாசனின் கெட்டப் வெளியே தெரியவந்துள்ளது.