Ticker

6/recent/ticker-posts

வரலாற்றில் இன்று: நவம்பர் 01: 1996- ஜே.ஆர். ஜெயவர்தன காலமானார் | #Trincoinfo


1520: தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது.
1996 : ஜே.ஆர். ஜெயவர்தன காலமானார்
1592 : கொரியக் கடற்படையினர் பூசான் என்ற இடத்தில் மிகப்பெரும் ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1755: போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 60,000 – 90,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1805:  ஆஸ்திரியாவை நெப்போலியன் முற்றுகையிட்டான்.
1814: நெப்போலியனின்  தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பாவின் எல்லைகளை மீளவரையும் பொருட்டு வியென்னா காங்கிரஸ் கூடியது.
1876: நியூஸிலாந்தின் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன.
1894: ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டர் இறந்ததை அடுத்து இரண்டாம் நிக்கலாஸ் மன்னனானார்;.
1904: இலங்கையில் அநுராதபுரம் வரையான  வட பிராந்திய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1911: இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன.
1914: முதலாம் உலகப் போர்: சிலியில் ஜேர்மனியக் கடற்படையுடன் நடந்த மோத லில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்.
2012: பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை சமர்பிக்கப்பட்டது
1922: ஒட்டோமான் பேரரசின் கடைசி சுல்தான் ஆறாம் மெகமெட் பதவியிழந்தார்;.
1928: துருக்கிய மொழி சீர்திருத்தம் ஏற்பட்டது. அரபு எழுத்துக்கள் புதிய துருக்கிய எழுத்துக்களாக மாற்றப்பட்டன.
1948: சீனாவின் மஞ்சூரியா என்ற இடத் தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் கொல்லப்பட்டனர்.
1950: புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதி கள் அமெரிக்கத் தலைவர் ஹரி ட்ரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
1951: அமெரிக்காவின் நெவாடாவில் அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
1954: புதுச்சேரி, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
1956: இந்தியாவில் மைசூர், கேரளா, மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1956: இந்தியாவில் கன்னியாகுமரி பிரதேசம் கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது.
1957: அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மக்கினா பாலம் மிச்சிகன் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1970: பிரான்ஸில் நடன மாளிகை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 144 பேர் கொல்லப்பட்டனர்.
1973: மைசூர் மாநிலம் கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டது.
1981: ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.
1982: ஜப்பானின் ஹொண்டா நிறுவனம் அமெரிக்காவில் வாகனத் தயாரிப்பை ஆரம்பித்த முதலாவது ஆசிய நிறுவனமாகியது.
1993: ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1996: இலங்கையின் முதலாவது நிறை வேற்று அதிகார ஜனாபதிதியான ஜே.ஆர்.ஜயவர்தன காலமானார்.
1998: மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
2006: இந்தியாவின் பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.
2012: பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரகா ஐ.ம.சு.கூட்டமைப்பின் 117 எம்.பிகள் கையெழுத்திட்ட குற்றவியல் பிரேரணை,  சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது
2012: சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில்  எரிபொருள் தாங்கி வாகனமொன்று வெடித்ததால் 25 பேர் உயிரிழந்ததுடன் 135 பேர் காயமடைந்தனர்.