Latest News

சுகாதார தொண்டர்களின் நியமனம் குறித்து வடமாகாண ஆளுநருக்கு வேண்டுகோள்

 
சுகாதார தொண்டர்களுக்கான நியமனம் வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு அமைவாக, 957 பேருக்கு வழங்க வேண்டும் என அமையத்தின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஆளணி தேவைப்பட்டால், முறைப்படியான கோரல்களின் மூலம் நியமனங்கள் வழங்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் அமையத்தினர் சார்பாக வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார தொண்டர்களின் நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையின் பின்னர், வடமாகாண சபையில் இன்று வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் அமையத்தினருடனான கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுகாதார தொண்டர்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, வடமாகாண சபையினால், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, கடந்த 2015 ஆம் ஆண்டு வடமாகாண சுகாதார அமைச்சராக இருந்த பா.சத்தியலிங்கம் வடமாகாணத்தில் உள்ள 820 சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவேண்டுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சபையிலும் பரிசீலிக்கப்பட்டிருந்தாலும் கூட 2018 ஆம் ஆண்டு சபையிலும், சுகாதார தொண்டர்கள் தொடர்பான விடயம் ஆராயப்பட்டிருந்தது.
வடமாகாண சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அன்றைய ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது.
820 சுகாதார தொண்டர்கள் தொடர்பாகவும், வடமாகாண சபையினால், அறிந்து ஆராய்ந்து, எடுக்கப்பட்டவை. அதன்பின்னர், வைத்தியசாலைகளில், பிரேத பரிசோதனை நிலையங்களில் கடமையாற்ற ஆண் தொழிலாளர்கள் தேவை என்பதன் அடிப்படையில் 127 தொழிலாளர்கள் உட்பட 10 பேர் உட்பட 137 உள்வாங்கப்பட்டுள்ளனர்.
820 மற்றும் 137 மாக இணைந்து 957 ற்கும் மேலாக உள்ளவாங்கப்பட்டவர்கள் இரண்டு வருட சேவையை நிறைவு செய்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்த 957 பேருக்கும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென்பதே எமது ஏகமானதான கோரிக்கை.
ஒரு சபை ஆய்ந்தெறிந்த விடயங்களை, இந்த அடிப்படையில் ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென ஆளுநரிடம் கோரவுள்ளோம்.
அதற்கு மேலே ஏதாவது நியமனங்கள் இருந்தால், அவை முறைப்படியாக கோர வேண்டும். அவ்வாறு நியமனங்கள் கோர வேண்டுமாயின், இந்த 957 பேருக்கும் நியமனங்கள் வழங்கிய பின்னர், அவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் 38 உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்ற தயங்குவது, கவலைக்குரிய விடயமென்றும் தெரிவித்துள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சுகாதார தொண்டர்களின் நியமனம் குறித்து வடமாகாண ஆளுநருக்கு வேண்டுகோள் Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top