Latest News

அரசியல் கதை... : மீண்டும் இணையும் ரஜினி - முருகதாஸ்


ரஜினிக்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் அடுத்தடுத்து அந்த இயக்குனர்கள் படத்தில் நடிக்க விரும்புவார். எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு முதல் பா.ரஞ்சித் வரை அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்தும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் ஆர்வமுடன் இருக்கிறார்.

தர்பார் படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம், அடுத்த படத்திற்கான லொக்கேஷனை கண்டுபிடிக்க தனி டீம் ஒன்றை நியமித்திருப்பதில் இருந்து இது உறுதியாகிறது. விரைவில் அரசியலுக்கு வர இருக்கும் ரஜினி, பவர்புல்லான ஒரு அரசியல் படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போதுள்ள அரசியலையும், அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்யாமல், விமர்சிக்காமல் தான் அரசியலுக்கு வந்தால் என்ன மாதிரி இருக்கும் என்பதை மக்களுக்கு சொல்லும் வகையில் அந்த படத்தின் கதை இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.இதனை முருகதாசிடம் ரஜினி தெரிவித்திருக்கிறார். 

இதைத் தொடர்ந்து ரஜினிக்கு தெரியாமலேயே அவர் விரும்பிய மாதிரியான கதை ஒன்றை தனது குழுவினருடன் சேர்ந்து எழுதி, விவாதித்து அதை முடித்தும் விட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கதையின் பைண்டட் ஸ்கிரிப்டை ரஜினி கையில் கொடுத்து விட்டாராம். அதை படித்து பார்த்த ரஜினி "இதத்தான் நான் எக்ஸ்பைட் பண்ணினேன். அடுத்து இதை பண்ணுவோம்" என்று பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். இதனை லைகாவே தயாரிக்க இருக்கிறதாம். இது தர்பார் படத்திற்கு அடுத்த படமா, அல்லது சிறுத்தை சிவா ரஜினியை வைத்து இயக்கும் படத்திற்கு பிறகா என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அரசியல் கதை... : மீண்டும் இணையும் ரஜினி - முருகதாஸ் Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top