Latest News

சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே காலமானார்

சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே தனது 95 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
அவர் சுகவீனமடைந்திருந்த நிலையிலேயே காலமானதாக, அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.  
அத்தோடு, கடந்த ஏப்ரல் முதல் சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையொன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும், வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிம்பாப்வேயில் மூன்று தசாப்தகாலமாக ஆட்சியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே, கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.
சுதந்திரத்திற்கு பின்னர் சிம்பாப்வேயில் இடம்பெற்ற முதலாவது தேர்தலில் ரொபர்ட் முகாபே வெற்றி பெற்றார். அத்தோடு, 1980 இல் அவர் பிரதமராகியிருந்தார். 1987 இல் அவர் தனது பதவியை ரத்து செய்து, ஜனாதிபதியாகியமை குறிப்பிடத்தக்கது.   

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே காலமானார் Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top