Latest News

மனைவி தூங்குவதற்காக விமானத்தில் 6 மணி நேரம் நின்ற கணவர்...! - வைரலாகும் புகைப்படம்


ஆணோ, பெண்ணோதன் துணை மீதான காதலைஎப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறஇந்தப்படமும்அப்படியொரு காதலைச் சொல்லியபடிதான் வைரலாகிக்கொண்டிருக்கிறது.மனைவி மீதான ஒரு கணவரின் பேரன்பை அருகிலிருந்து கவனித்த சக பயணி ஒருவர், இதைப் படமெடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்தது வைரலாகியுள்ளது. 

இப்படியொரு ஆச்சர்ய புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டவரின் பெயர் கோட்னி லீ ஜான்சன். அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த என்.ஜி.ஓ ஆவார். விமானப் பயணத்தில் தான் கண்ட காட்சியைத்தான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், 'ஆறு மணி நேரம் நின்றுகொண்டிருந்த கணவர்; நிம்மதியாக உறங்கிய மனைவி. இதுதான் காதல்' என்று ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்ய, நெட்டிசன்கள் ஆளுக்கொரு கமென்ட்டுடன் களமிறங்கிவிட்டார்கள்.
அவர்கள் வெளிநாட்டுதம்பதியர். கணவர்நின்றபடி இருக்க, மனைவி கணவருடைய இருக்கையிலும் சேர்த்துநிம்மதியாகப் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்ல... கிட்டத்தட்ட 6 மணி நேரங்கள்..அந்தக்கணவர் நின்றபடியே விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், கணவரின் காதலைசிலாகிக்க, இன்னும் சிலர்'தன்னலமற்ற கணவர்' என்று கொண்டாட ஆரம்பித்துள்ளனர். 'சுயநலம் பிடித்தவர்' என்று தூங்கிக்கொண்டிருந்தமனைவியை சிலர் திட்டவும் செய்தனர்.

'என் கணவரை இப்படியெல்லாம் நிற்க வைக்க மாட்டேன். அவர் 10 நிமிடம் சேர்ந்தாற்போல நின்றாலே என் மனசு தாங்காது' என்று ஒரு பெண் பதற, 'இப்படி சீட்டில்படுப்பதைவிட கணவருடைய மடியில்படுத்துத்தூங்கியிருக்கலாம் அல்லது தோளில்சாய்ந்துதூங்கியிருக்கலாம். அது இன்னும் இதமாக இருந்திருக்குமே...'என்று இன்னொரு பெண் அறிவுரையும் சொல்லியிருக்கிறார். 'பாவம் அந்த மனைவிக்குஉடல் நலம் சரியில்லைபோல' என்று ஒரு பெண் வருத்தப்பட, இன்னொருவர் 'டைட்டானிக்' பட கிளைமாக்ஸில் நாயகியைக் காப்பாற்றிவிட்டு நாயகன் தண்ணீருக்குள் இருக்கும்GIF-ஐ போட்டு செல்ஃபிஷ் என்று கமென்ட் செய்திருக்கிறார். இதனைத் தாங்க முடியாத சிலரோ, 'அது அவங்களோட சொந்த விஷயங்க. அதைப்பத்திநாமயார் கமென்ட்செய்ய..? ஆனால், அதுவொருநல்ல காதல்புகைப்படம்' எனப் பதிவிட்டுள்ளனர்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மனைவி தூங்குவதற்காக விமானத்தில் 6 மணி நேரம் நின்ற கணவர்...! - வைரலாகும் புகைப்படம் Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top