Latest News

திருகோணமலையில் வெடிபொருட்கள் மீட்பு



திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தாம் கட்டைப்பகுதியில் விமானப்படை முகாம் இருந்த பகுதியிலிருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வெடிபொருட்கள் இன்று (28) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 04 வருடங்களுக்கு முன்னர் பத்தாம் கட்டை பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான படைமுகாம் இருந்த இடத்திலிருந்து படைமுகாம் அகற்றப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இன்றையதினம் அப்பகுதியில் இருந்து ஒருதொகை வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
படை முகாம் இருந்த இடத்தில் வெடிபொருட்கள் இருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார்  அவ்விடத்தை சுற்றி வளைத்தனர். 
இதனை அடுத்து மொரவெவ பொலிஸார் அவ்வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைக்காக திருகோணமலை நீதிமன்றில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்து அனுமதி கிடைக்கப் பெற்றதை அடுத்து அதனை செயலிழக்க செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 
குறித்து வெடிபொருட்கள் விமானப்படைக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலையில் வெடிபொருட்கள் மீட்பு Description: Rating: 5 Reviewed By: Riish
Scroll to Top