Latest News

2020 ரி20 உலகக் கிண்ண நேரடி தகுதியை இழந்தது இலங்கை அணி


2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள ரி20 உலக்கிண்ண போட்டிகளுக்கான நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இழந்துள்ளன.
சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிகளுக்கமைய, உலகக் கிண்ண தொடருக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கான ரி20 தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே நேரடியாக உலக்கிண்ண தொடருக்கு தகுதி பெறுவதோடு மேலும் 4 அணிகள் குழுநிலை தகுதிகாண் போட்டிகள் மூலம் உலகக்கிண்ண ரி20 போட்டிகளுக்கு தகுதி பெறும்.
அந்த வகையில் பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக 2020 உலகக் கிண்ண ரி20 தொடரின் 12 அணிகள் மோதும் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: 2020 ரி20 உலகக் கிண்ண நேரடி தகுதியை இழந்தது இலங்கை அணி Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top