Latest News

திருகோணமலை துறைமுகப்பகுதியில் கண்ணாடியினாலான ஒரு உணவகம்...


திருகோணமலை துறைமுகப்பகுதியில் உள்ள இறங்குதுறை தற்சமயம் பாவனையில் இல்லாமல் உள்ளது ,இந்த இறங்குதுறை ஏறத்தாழ 100 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டது.
இப்படகு இறங்குதுறையானது முன்னர் மூதுார் - திருகோணமலைக்கான படகு சேவைக்காக பெரிதும் பாவிக்கப்பட்டது. இவ் இறங்குதுறையின் ஆகக்கூடிய ஆழம் 6 அடி முதல் 7 அடி வரைதான் உள்ளது.இவ் இறங்கு துறையின் மேல் பகுதி (துாண்,கூரை)என்பன அகற்றப்பட்டு அதன் கீழ்பகுதி சில திருத்தங்களுடன் ஒரு தளமாக பாவிக்கப்படலாம் எனவே இப்பகுதியை மரத்தினாலான தளம் ஒன்றை அமைத்து அதனை சுற்றி Handrails பாதுகாப்பிற்காக அமைத்து நடுவே ,முழுவதும் கண்ணாடியினாலான ஒரு உணவகம் அமைக்கப்படுமேயானால் திருகோணமலைக்கு வரும் உள்நாட்டு,வெளிநாட்டு உல்லாச பயணிகள் பொிதும் விரும்பி இவ் உணவகத்திற்கு வருவார்கள். மேலும் இத்தளத்தின் இடை இடையே கண்ணாடியினாலான தளம் அமைக்கப்படும் போது உணவகத்தின் உள்ளே இருந்து கடலுக்குள் உள்ள மீன்களையும் பாா்க்கக்கூடியதாகயிருக்கும். கண்ணாடியினால் ஆன இவ்உணவகம் துறைமுகத்தின் பாா்வையை தடை செய்யாது என்பதையும் கருத்தில் கொண்டே இது தீா்மானிக்கப்பட்டது.

இவ் அபிவிருத்தியை செய்வதாயின் துறைமுக அதிகாரசபை, இலங்கை கடற்படை, பொலீஸ், கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் சிபாரிசு பெறவேண்டிவரும். இவ்அபிவிருத்தி திட்டம் நகரசபையால் அமுல்படுத்தப்படுமாயின் நகரசபைக்கு வருமானம் மட்டும் அல்லாது ஒரு சிலருக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி கொடுக்கமுடியும். 
இது தொடா்பான வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை நகரசபை எதிா்பாா்க்கின்றது.
எதிா்பாா்க்கும் இவ்வுணவகத்தின் மாதிாி அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

தலைவா்,
நகராட்சிமன்றம்,
திருகோணமலை.







  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலை துறைமுகப்பகுதியில் கண்ணாடியினாலான ஒரு உணவகம்... Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top