Latest News

திருகோணமலையில் 03 மாடி படகு தாிப்பிடம் (Three Storied Boat Park) அமைக்க நகரசபையால் தீா்மானிக்கப்பட்டுள்ளது. - Trincoinfo


திருகோணமலை 10 ஆம் குறுச்சி மற்றும் வீரநகர் பகுதிகளில் கார்த்திகை மார்கழி மாதங்களில் ஏற்படும் சீரற்ற காலநிலையின்போது கடல் பெருக்கு ஏற்பட்டு கரையோரப் பகுதிகளில் உள்ள சிறிய வாடிகள் மற்றும் படகுகள் நீாில் இழுத்து செல்லப்படுவது ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது . இம்முறை கடல் நீா் உட்புகுவதை தடைசெய்ய நகரசபையால் 1600 உரப்பைகள் மண்மூடையால் அறண் அமைப்பதற்கு வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் போது அனேகமான படகுகள் உரிமையாளர்களால் வீதிகளின் ஓரத்தில் பாதுகாப்பாக வைத்திருந்ததமை அவதாணிக்கப்பட்டது. 

இந்த நீண்டகாலப்பிரச்சினையை தீா்க்கும் முகமாக கடற்கரையை அண்டிய பகுதியொன்றில் அப்பகுதி கடற்தொழிலாளா்களின் ஒத்துழைப்புடன் 03 மாடி படகு தாிப்பிடம் (Three Storied Boat Park) அமைக்க நகரசபையால் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை திருகோணமலை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை பெற்றுத்தர முயற்சிப்பதாக கூறியுள்ளது. அத்துடன் கடற்துறை அமைச்சின் மாகாண பணிப்பாளரும் இதற்கான நிதியை பெற்றுத்தர முயற்சிப்பதாக கூறியுள்ளாா். இக்கட்டடத்தில் படகுகளை ஏற்றுவதற்கு மின்தூக்கி ஒன்றை (Electric Hoist) அமைக்கலாம்.
கீழ்த்தளம் படகு நிறுத்துவது மட்டுமல்லாமல் கடற்றொழிலாளா்களின் வலை வைப்பதற்கும் அதனை பின்னுவதற்கும், படகு இயந்திரங்கள் வைப்பதற்கும் பாவிக்கலாம்.
இவ்வாறான மேலுமொரு கட்டடத்தை அமைப்பதற்கு நிதியை பெற்றுத்தரக்கூடியவா்கள் நகரசபையுடன் தொடா்பு கொள்ளலாம்.
அபிப்பிராயங்களும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றது.
தலைவா்
நகராட்சி மன்றம்
திருகோணமலை

(News By - நகராட்சி மன்றம் திருகோணமலை FB)








  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலையில் 03 மாடி படகு தாிப்பிடம் (Three Storied Boat Park) அமைக்க நகரசபையால் தீா்மானிக்கப்பட்டுள்ளது. - Trincoinfo Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top