Latest News

மொட்டை ராஜேந்திரன் எப்படி முடியை இழந்தார் தெரியுமா?கரகர குரல், மொட்டை தலை, கட்டுமஸ்தான தேகம்... நிச்சயம் நீங்கள் ஒரு தமிழ் சினிமா ரசிகராக இருந்தால்.. உங்கள் மனதில் எழும் முதல் பெயர் ராஜேந்திரன், மொட்டை ராஜெந்திரனாக தான் இருக்கும். பிதாமகனில் நடித்திருந்தாலும், இவரை ஒரு நடிகராக பெரும்பாலான ரசிகர்கள் அடையாளம் கண்டது பாலாவின் மற்றொரு திரைப்படமான நான் கடவுள் தான். ஆரம்பத்தில் இவரை சிலர் 'நான் கடவுள்' ராஜேந்திரன் என்று அழைத்து வந்த போதிலும், அடுத்தடுத்த படங்களின் போது இவரது மொட்டை தலை இவருக்கான அடையாளமாக மாறியது.

ஸ்டண்ட் மேனாக ஐநூறுக்கும் மேலான திரைப்படங்களில் வேலை பார்த்திருக்கிறார் ராஜேந்திரன். அப்போதெல்லாம் ராஜேந்திரன் தலையில் முடி இருந்தது. ராஜேந்திரன் அவர்களுக்கு மரபணு அல்லது இயற்கையாக சொட்டை அல்லது முடி உதிர்வு ஏற்படவில்லை. நீங்கள் கொஞ்சம் உத்து கவனித்திருந்தால் தெரியும், தலை என்று மட்டுமின்றி இவருக்கு தாடி, மீசை, ஏன் புருவத்தில் கூட முடி இருக்காது. எந்த காரணத்தால் ஸ்டண்ட் மேன் ராஜேந்திரனுக்கு இந்த நிலை ஏற்பட்டது தெரியுமா?

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் ராஜேந்திரன் ஸ்டண்ட் மேனாக பணிபுரிந்து வந்தார் என்பது அனைவரும் அறிந்தது. ஒருமுறை மலையாள திரைப்படத்தின் சண்டை காட்சியில் நடித்து வந்தார் ராஜேந்திரன். அப்போது ஒரு காட்சியின் போது ராஜேந்திரன் ஒரு குளத்தில் குதுத்தி ஸ்டண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உயரமான கட்டிடங்கள், கண்ணாடி, ரோடு, பஸ், ஆட்டோ, மலைமேல் இருந்து என கடினமான இடங்களில் குதிப்பதே ஸ்டண்ட் மேன்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. குளத்தில் குதிப்பது என்ன பெரிய கஷ்டமா? தண்ணீர் தானே என்று அசால்ட்டாக நினைத்து குதித்து ஸ்டண்ட் காட்சியில் நடித்து முடித்தார் ராஜேந்திரன்.

ஆனால், அந்த மலையாள திரைப்படத்திற்காக ராஜேந்திரன் குதித்து ஸ்டண்ட் செய்த குளத்தின் நீரில் நிறைய கெமிக்கல் இராசாயன கலப்பு இருந்திருக்கிறது. அதை யாரும் பெரிதாக கவனிக்கவும் இல்லை. அதனால் ராஜேந்திரன் தன் முடியை இழப்பார் என்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த குளத்தில் கலந்திருந்த கெமிக்கல் காரணத்தால் ஏற்பட்ட தாக்கம் ராஜேந்திரனுக்கு அலர்ஜியாக மாறியது.

ராஜேந்திரனுக்கு குளத்தின் கெமிக்கல் நீர் காரணமாக உடலில் அலர்ஜி உண்டானது. இதன் காரணத்தால் தலை, தாடி, மீசை ஏன், புருவத்தின் முடி முதற்கொண்டு முற்றிலும் இழந்தார் ராஜேந்திரன். மேலும், ஏற்கனவே சீரிய உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான உடல் கொண்டிருந்த ராஜேந்திரன் அவர்களது முகம் ரஃப் அன்ட் டஃப்பாக தான் இருக்கும். இதில், இந்த அலர்ஜி காரணத்தால் முடி இழப்பு நேரிட அவரது முகம் வில்லனுக்கே உரித்தான முகம் போல மாறியது.

மேலும், ராஜேந்திரனின் மொட்டை தலையுடன் மிகவும் பிரபலமான ஒன்று அவரது கரகர குரல். ஆரம்பத்தில் தனது முதல் படத்தின் கதாபாத்திரத்திற்காக அந்த கரடுமுரடான வாய்ஸில் பேசியதாகவும். பின்னர், அடுத்தடுத்த படத்தின் இயக்குனர்களும் அதே குரல் தான் நன்கு உள்ளது என்று கூறி, அப்படியே பேச கூறினார்கள் என்றும் தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இதில், கொடுமை என்னவெனில், நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் பேசுவதை கட்டிலும், பன்மடங்கு அவர் தனது டப்பிங்கின் போது சத்தமாக கரகர குரலில் பேச வேண்டி உள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மொட்டை ராஜேந்திரன் எப்படி முடியை இழந்தார் தெரியுமா? Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top