Latest News

பேஸ்புக்கில் டேட்டிங் வசதி அறிமுகம்!


பேஸ்புக் என்பது சமூக வலைதளம் என்று அனைவருக்கும் தெரிந்தது தான். இது ஒவ்வொரு நிமிடமும் தன்னை பரபரப்பாக வைத்துக் கொள்ளும், அதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமானவற்ற மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டே இருப்பார்கள்.
இந்தபேஸ்புக்கால் நட்பு-காதல் என புதிய அறிமுகமும் கிடைக்கும். காலம் வகுத்த கோடு என்று இல்லாமல் பேஸ்புக்கால் புதிய உறவுகளும் நமக்கு கிடைப்பார்களா என்றால் சந்தேகம் வேண்டாம். இன்று வரை கிடைத்து தான் வருகிறார்கள். 
பேஸ்புக்கில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த ஆண்-பெண்களும் நட்பு மலர்ந்து பிறகு காதல் ஏற்பட்டு, திருமணம் என்றும் இன்ப பெருவிழாவில் முடிந்த கதைகளும் உண்டு. இதற்காகவே தற்போது பேஸ்புக் புதிய வடிவம் எடுத்து, தனிமையில் உள்ளவர்களை இணைக்க பெற்றோர்-நண்பன் இவர்களை தாண்டி சமூக இணையதளம் பொறுப்பை எடுத்துள்ளது.
பேஸ்புக்குக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதில் இளைஞர்கள் தான். இதில் நல்ல கருத்துக்கும் சரி, தவறான கருத்துக்கும் சரி பஞ்சம் ஏற்பட்டத்தில்லை. அதேபோல், நாட்டையும் தாண்டி எல்லையில்லா நட்புகளை கொண்டு வருகிறது. எதிரி நாடாக இருந்தாலும், அங்கு காதலன் காதலி, நண்பன், தோழி என பலரையும் உருவாக்கி வருகிறது இந்த பெற்றோரையும் நண்பணையும் தாண்டிய இணையில்லா உற்ற தோழன் பேஸ்புக்.
பேஸ்புக்கில் இன்றயை தலைமுறையினரின் கிசுகிசுக்கு அளவே இருக்காது. அது ஆணோ இல்லை பெண்ணோ.! அவர்கள் விரும்பியவர்களுக்கு பேஸ்புக் மூலம் அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் தூது விட்டு வந்தனர். ஆனால் அவர்களுக்கு வெளிப்படையாக சொல்லாமல் மவுனம் காப்பதும் உண்டு. சிங்கிளா இருந்தாலும் தன் காதலை அந்த பெண் ஏற்றுக் கொள்வாளா? மணம் செய்ய சம்மதம் தெரிவிப்பாளா? என்று தோன்றும். இதேபோலத்தான் பெண்களுக்கும்.
காதல் தோல்வியால் மனவேதனை அடைந்த ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. தனது உற்ற ஜோடியை தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஒரு நாளே இல்லை வாழ்நாள் முழுக்க ஆசைப்பட்டவர்களுடன் வாழ முடியவில்லை என்று எல்லாம் ஆயிரம் ஏக்கங்கள் இருக்கலாம். இனி கவலையை விடுங்க பாஸ் இதுக்கு பேஸ்புக்கே தனி தீர்வு கொடுத்து இருக்கிறது. இதற்காகவே விரைவில் பேஸ்புக்கில் தனியாக டேட்டிங் என்று தனி ஆப்சன் வரவிருக்கிறது.
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனியா திரிஞ்ச கோழி குஞ்சுக்கு ஜோடி சிக்கிகிச்சு என்று நகைச்சுவையாக ஒரு பாடலை பாடி இருப்பார். அதுபோலவே தனியாக திரிந்தவர்களுக்கு ஜோடி பேஸ்புக்கல் கிடைச்சிருச்சு என்று சொல்லி ஹாயா வலம் வரும் காலமும் விரைவில் வர இருக்கிறது. இதற்காக பேஸ்புக் பல்வேறு சோதனை ஓட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. விரைவில் டேட்டிங் என்று ஆப்சன் வரும் வாழ்நாள் துணையும் தேர்வு செய்யலாம் அல்லது சில நாள் என்ஜாய் மெண்ட் வாழ்கையும் வாழலாம்.
பேஸ்புக் பக்கத்தில் தற்போது வரை 200 மில்லியன் சிங்கிள்ஸ் உள்ளனர். அவர்களுக்கு ஏதவாமு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்காகவே பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர் தற்போது, தாங்கள் விரும்பிய படி டேட்டிங் செய்யும் வசதியை உருவாக்கியுள்ளார்.
ஒத்த ஆண்ணும், ஒத்த பெண்ணும் இனி கவலையில்லாமல் டேட்டிங் செய்யும் வசதியை விரைவில் பேஸ்புக்கில் வரவிருக்கிறது இதற்காகவே தற்போது, சோதனை முறையில் தனது ஊழியர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் நிறைகுறைகளை களைந்து விரைவில் ஊழியர்கள் தெரிவிப்பார்கள். பிறகு அனைவருக்கும் பரவலாக சேவையாக அறிக்கப்படும் என்று எப்8 மாநாட்டில் பேஸ்புக் நிறுவனர் மார்க் அறிவித்துள்ளார். இதனால் உலக முழுவதும் இருக்கும் சிங்கிள்ஸ்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: பேஸ்புக்கில் டேட்டிங் வசதி அறிமுகம்! Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top