Latest News

வாடகை வீட்டில் குடியிருந்த இளைஞரை ஒன் நைட் ஸ்டாண்ட்க்கு அழைத்த ஓனர் பெண்மணி -வைரல் போஸ்ட்!

வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வலி. ஒரு நாள், ஒரு வாரம் வாடகை தருவதற்கு தாமதம் ஆனாலும், மனதுக்குள் ஓனர் என்ன சொல்லி திட்டுவார், வீட்டை காலி செய்ய கூறிவிடுவாரா? என்ற அச்சம் ஹை-பிபி போல எகிறும்.
மேலும், பல படிவங்களில் நிரந்தர முகவரி என்ற இடத்திலும், தற்காலிக முகவரியையே எழுதும் போது உண்டாகும் வலி என்பது வேறு யாராலும் உணர இயலாது.

 சில சமயங்களில் வாடகைக்கு குடி இருப்பவர்களை சிலர் ஓனர்கள் கேவலமாக நடத்துவார்கள். ஆனால், அவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்ட வகையில் சீனாவின் சேர்ந்த வீட்டு உரிமையாளர் பெண்மணி ஒருவர் மோசமான முறையில் நடந்துக் கொண்டிருக்கிறார்.

பெயர் அறியப்படாத இந்த பெண்மணி சீனாவின் பீஜிங் பகுதியில் வசித்து வருபவராக அறியப்படுகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இளைஞர் ஒருவர் ஒரு மாத வாடகை அளிக்க தாமதித்துள்ளார்.
எனவே, வாடகை பணத்தை கேட்டு மெசேஜ் செய்திருக்கிறார் அந்த ஓனர் பெண்மணி. அப்போது கொஞ்ச நாள் அவகாசம் கேட்ட இளைஞருக்கு ஒரு ஆபர் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார் அந்த ஓனர் பெண்மணி.

சீன மொழியில் இருந்த அந்த உரையாடலை 9GAG என்ற கேலி இணையதள நிறுவனம் ஒன்று மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளது. அதில் காணப்படும் உரையாடலானது...
பெண்: இது வாடகை செலுத்துவதற்கான காலம்...
இளைஞர்: என்னிடம் போதுமான பணம் இல்லை.. எனக்கு சில நாள் ஆகாசம் அளியுங்கள்... (கெஞ்சி கேட்டுள்ளார்)
கால அவகாசத்திற்கு அந்த வீட்டு ஓனர் பெண் மணி அளித்த பதிலானது திகைக்க வைத்திருக்கிறது.
"நீ எனக்கு பணம் தராவிட்டாலும் பரவாயில்லை. அதற்கு பதிலாக இன்று வேலை முடித்து விட்டு என்னுடன் கம்பெனிக்கு வீட்டுக்கு வா. நீ வாடகை எல்லாம் தர அவசியமில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த பதிலை கேட்டு அதிர்ந்த அந்த இளைஞர்... தான் இன்றே வாடகை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
இன்று ஒரு இரவு மட்டும் என்னுடன் இரு.. இந்த ஒரு வருடத்திற்கு நீ வாடகையே கொடுக்க வேண்டாம். உனக்காக இன்று வீட்டில் காத்திருப்பேன், என்று அந்த இளைஞரிடம் கெஞ்சி கேட்டுள்ளார் அந்த ஓனர் பெண்மணி.
ஆனால், அதற்கு அந்த இளைஞர் என்ன பதில் கூறினார்... என்பதற்கான உரையாடல் எங்கும் பதிவாகவில்லை.
9GAG என்பது கேலி படங்கள், வீடியோக்கள் பதிவு செய்யும் இணையமாகும். இவர்கள் உலகின் பிரபலமான நகைச்சுவை மற்றும் கேலிக்கு புகழ்பெற்ற இணையமாக திகழ்கிறார்கள்.
இந்த ஸ்க்ரீன்ஷாட் நிஜமாகவே வீட்டு ஓனர் பெண்மணிக்கும், இளைஞருக்கும் மத்தியில் நடந்தது தானா? அல்லது கேலிக்காக உருவாக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
கூகிள் ப்ளே ஸ்டோரில் சென்று Fake Whatsapp Chat என்று செயலிகள் தேடினால் பல செயலிகள் கிடைக்கும். அவற்றின் மூலமாக கூட இப்படியான போலி உரையாடல் உருவாக்க வாய்ப்புகள் உண்டு.
இன்றைய தேதியில் இணையத்தில் வைரலாக பரவும் பெரும்பாலான நிகழ்வுகள் போலியானவை தான். வெரிபைடு என்ற பெயரிலேயே போலியான பதிவுகளை பரப்புகிறார்கள்.
எனவே, இந்த பதிவு எவ்வளவு சதவிதம் உண்மையானது என்று அறிவது கடினமானது.
இந்த பதிவு போலியானதா, நிஜமானதா என்று அறிவது தான் கடினமே தவிர, இது போன்ற சம்பவங்கள் தற்சமயம் அதிகமாக மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்து வருகிறது என்பது உண்மையே.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் ஒரு ஆண் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள தயாராக இருக்கும் பெண்ணுக்கு இலவசமாக வீடு வாடகைக்கு அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்திருந்தார்.
இதுப் போல பல விளம்பரங்கள் வெளியாகி பிறகு, பின்வாங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான விளம்பரங்கள் நாளேடுகளில் வர துவங்கிவிட்டன. ஆனால், நீதி அமைச்சகம் செக்ஸ் வேண்டி வாடகை இல்லாமல் வீட்டில் ஒரு பெண்ணை தங்க வைக்க அழைப்பது விபச்சாரத்திற்கு இணையானது. இதற்கு ஏழாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீடு இல்லாதவர், பயமுறுத்தி, அவர்களது இயலாமையை பயன்படுத்தி வீடுகளை இலவசமாக வாடகைக்கு கொடுத்து அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முயல்வது கடுமையான செக்ஸுவல் குற்றம் என்றும் சட்டம் கூறுகிறது.
இது போன்ற குற்றங்களில் பெண்கள் மட்டுமல்ல, இளம் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள். பண பற்றாக்குறை, வேலையின்மை, பொருளாதார சிக்கல் போன்றவற்றை காரணமாக கொண்டு... பெண்கள் மற்றும் இளம் ஆண்களை செக்ஸ் விஷயத்திற்கு வீட்டு ஓனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
வீடு இன்றி தெருக்களில் வசிக்கும் நபர்களை டார்கெட் செய்து இதற்கு இணங்க வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அதிகம் பதிவாகியுள்ளது.
இதுப்போல வெளியாகிய விளம்பரங்கள் சிலவன...
#1 என்னிடம் ஒரு காலியான அறை இருக்கிறது. நிர்வாணமாக வீட்டில் இருக்க விரும்பும் நபர்கள் அவர்களது நிர்வாண படத்துடன் விபரங்களை அளிக்கவும்.
#2 என்னுடன் ஒரு பெண்மணி தங்கிக் கொள்ள இலவசமாக அனுமதி வழங்கப்படும். அவர் சமையல், க்ளீனிங் மற்றும் எனக்கு கம்பெனி தரவேண்டும்.
#3 பெண்களுக்கு மட்டும் கெஸ்ட் அறை இலவசமாக இருக்கிறது. இரண்டு வாரங்கள் இலவசமாக இருந்துக் கொள்ளலாம். சுத்தம் செய்யும் வேலைகள் மட்டும் செய்ய வேண்டும்.
#4 வீடு இல்லாத பெண்களுக்கு வீடு. வாடகை இல்லை, உணவு வழங்கப்படும். யாராக இருந்தாலும் வரலாம்.
#5 பிரெண்ட்ஸ் வித் பெனிபிட் என்ற முறையில் பெண்களுக்கு வாடகை இல்லாமல் தங்குவதற்கு வீடு. வேண்டியவர்கள் புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பலாம்.,
என, இதுப் போன்ற பல விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: வாடகை வீட்டில் குடியிருந்த இளைஞரை ஒன் நைட் ஸ்டாண்ட்க்கு அழைத்த ஓனர் பெண்மணி -வைரல் போஸ்ட்! Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top