இன்றைய நாளில் அன்று நடந்தவைகள் - 02/07/2019 | Trincoinfo




  • 1698 – தோமசு சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் எடுத்தது. ஆனாலும் இறுதி விடுதலைச் சாற்றுரை சூலை 4 இலேயே வெளியிடப்பட்டது.
  • 1823 – பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
  • 1881 – அமெரிக்க அரசுத்தலைவர் சேம்சு கார்ஃபீல்டு (படம்) சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19 இல் மரணமானார்.
  • 1897 – பிரித்தானிய-இத்தாலியப் பொறியாளர் மார்க்கோனி வானொலிக்கான காப்புரிமத்தை இலண்டனில் பெற்றார்.
  • 1976 – வியட்நாம் குடியரசின் வீழ்ச்சியை அடுத்து 1954 முதல் பிரிந்திருந்த கம்யூனிச வடக்கு வியட்நாம் தெற்கு வியட்நாமுடன் வியட்நாம் சோசலிசக் குடியரசு என்ற பெயரில் இணைந்தது.
By - Wikipedia

Post a Comment

0 Comments