கல்வி அமைச்சு முக்கிய அறவித்தல் | Trincoinfo


நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கைவிடப்பட்ட பாடசாலை நாட்கள் மீண்டும் வேறு தினங்களுக்கு நடத்தப்படமாட்டாதென கல்வி 
அமைச்சு அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் வழமைப் போன்றே இடம்பெறும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட மிலேச்சத்தனமான செயலால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 வாரகால பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
அனைத்து பாடவிதானங்களையும் உள்ளடக்கக்கூடிய வகையில் நேர அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments