16,000 பட்டதாரிகளுக்கு அரச தொழில்வாய்ப்பு வழங்க நடவடிக்கை | Trincoinfo


தொழிலற்ற பட்டதாரிகள் 16,000 பேரை அரச சேவைக்கான பயிற்சிக்காக உள்ளீர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செலயாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சேர்ப்புக்கான அமைச்சரவைப் பத்திரம், கடந்தவாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய, அரச சேவை பயிற்சிக்கான ஆட்சேர்ப்புக்காக திட்டமிடப்பட்டிருந்த பட்டதாரிகளுக்கு, ஒரு வருட பயிற்சிக்குப் பின்னர் அரச சேவையில் நிரந்தர பதவிகள் வழங்கப்பட உள்ளதாக அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேநேரம், 16,000 புதிய பட்டதாரிகளுக்கு மேலதிகமாக, இதற்கு முன்னதாக ஆட்சேர்க்கப்பட்டிருந்த 3,650 பேர் எதிர்காலத்தில் அரச சேவையில் நிரந்தர பதவிகளுக்காக நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்காக, அரச நிர்வாக அமைச்சு, திறைசேரி மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழு என்பனவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments