எதிர்வரும் 15ம் திகதி அரச மற்றும் வர்த்தக விடுமுறை..... - Trincoinfo


எதிர்வரும் 15ம் திகதி அரச மற்றும் வர்த்தக விடுமுறை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போது குறித்த தினம் வங்கி விடுமுறை தினமாக மாத்திரமே நிலவுகிறது.

இந்தநிலையில், இன்றைய தினம் பிரதமர் தலைமையில் இடம்பெறுவுள்ள கலந்துரையாடலில் குறித்த விடுமுறை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறி இருந்தார்.

இதன்படி 15ம் திகதியை அரச மற்றும் வர்த்தக விடுமுறையாக அறிவிக்க அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டு எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments