Latest News

திருகோணமலை மட்டிகளி கடல் ஏாி பூங்கா இரண்டாம் கட்டம்


மட்டிகளி கடல் ஏரி பூங்கா ஏற்கனவே நகராட்சிமன்றத்தால் உருவாக்கப்பட்டு பொதுமக்களால் பெரிதும் பாவிக்கப்படும் இந்த நிலையில் அதன் 02ம் கட்ட வேலைகள் ஆஞ்சநேயர் கோவிலடியிலிருந்து 22ம் படையணி முகாம் வரையுள்ள கடற்கரைப்பகுதி நிரப்ப்பட்டு இப்பூங்கா அமைக்கப்பட்வுள்ளது. இதன் நீளம் அன்னளவாக 350 m , ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ள பூங்காவின் நீளம் 750 m , இந்த இரண்டாம் கட்ட பூங்கா செய்து முடிக்கப்பட்ட பின் முழுநீளம் ,1100 mஆக அமையும்
ஆஞ்சநேயர் கோவில் மற்றும் விளையாட்டு திடல் அமையுமிடங்களில் அமையும் நடைபாதை ஆஞ்சநேயர் கோவிலையும் அருகேயுள்ள விளையாட்டு திடலையும் சுற்றி வருவதாக அமையும். அத்துடன் இப்பூங்காவில் உடற்பயிற்சிக்காக நடைபயிற்சியை மேற்கொள்வோரின் நலன் கருதி இடையிடையே உடற்பயிற்சி உபகரணங்களும் பொருத்தப்படவுள்ளது.
ஆலோசனைகள் ,அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றன.
இரண்டாம் கட்ட வேலைகள் தற்பொழுது ஆரம்பிக்கபட்டுள்ளதை படத்தில் காணலாம். 
தலைவர் 
நகராட்சி மன்றம்
திருகோணமலை







  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலை மட்டிகளி கடல் ஏாி பூங்கா இரண்டாம் கட்டம் Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top