Latest News

திருகோணமலை மட்டிக்கழி கடல் ஏரி - மிதிபடகு சவாரி சேவை -Trincoinfo


திருகோணமலை மட்டிக்கழி கடல் ஏரி பூங்காவிற்கு அருகிலுள்ள ஏரியில் மிதிபடகு சவாரி சேவை அமுல் படுத்த நகரசபை தீர்மானித்துள்ளது .இந்த மட்டிக்கழி கடல் ஏரி பூங்கா ஆழம் குறைந்த அலை இல்லாத ஓர் இடமாகும் இவ் இடம் மேற்கூறிய சவாரி செய்வதற்கு பாதுகாப்பான பொருத்தமான இடமாக காணப்படுவதால் இத்திட்டத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான தற்காலிக இறங்குதுறை கடலோர பாதுகாப்பு திணைக்களம் . கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

இத்திட்டத்தினை செயல்படுத்த விரும்பும் முதலீட்டாளர்கள் நகரசபையிடம் தொடர்புகொன்டு விடயங்களை அறியலாம்.

முதலீட்டாளர்கள் நகரசபையின் நிபந்தனைக்கு ஏற்ப தமது கேள்வியை சமர்ப்பிக்கும் பட்சத்தில் சபையில் அது பரிசீலிக்கப்பட்டு பொருத்தமான முதலீட்டாளரிடம் நிபந்தனைக்கு அமைய வழங்கப்பட்வுள்ளது.


இது தொடர்பான ஆலோசனைகள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது.
தலைவர்
நகராட்சி மன்றம்
திருகோணமலை

News By - நகராட்சி மன்றம் திருகோணமலை
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலை மட்டிக்கழி கடல் ஏரி - மிதிபடகு சவாரி சேவை -Trincoinfo Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top