728x90 AdSpace

Latest News

ad

திருகோணமலை நகர எல்லைக்குள் வீதி ஓரத்தில் பொருட்களை வைத்துள்ளோர் அதனை உடனடியாக அகற்ற



திருகோணமலை நகர எல்லைக்குள் உள்ள வீதியில் இரு பக்கமும் மண் பிட்டிகள் ,பாவனைக்குதவாத வாகனங்கள் மற்றும் கட்டிடப்பெருட்கள் ( மணல் , கல்) போன்றவை பாதை ஓரத்தில் போடப்பட்டுள்ளதால் பாதசாரிகளுக்கும் வாகனங்களுக்கும் இடையூறாக இருக்கின்றது. 

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற போக்குவரத்து ஆலோசனைக்குழு கூட்டத்திலும் பேசப்பட்டுள்ளது.


இப்பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 04.01.2019 முதல் பாதையில் இருபக்க ஓரத்திலும் போடப்பட்ட பொருட்கள் யாவும் நகராட்சி மன்றத்தால் அகற்றப்பட்டு பாதையை அகலமாக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எனவே வீதி ஓரத்தில் மேற்குறித்த பொருட்களை வைத்துள்ளோர் அதனை உடனடியாக தமது ஆதனத்திற்குள் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிள்றேன்.
இவ் அறிவித்தலின் பின்னரும் தாங்கள் நடவடிக்கை எடுக்காவிடின் பாதையிலுள்ள பொருட்கள் யாவும் உாிமை கோராத பொருட்களாக கருதி அகற்றப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்.


தலைவர்
நகராட்சி மன்றம் 
திருகோணமலை

இதன் முதற்கட்டமாக விகாரை வீதியில் நிருத்தி வைத்திருந்த வாகனமொன்று அகற்றப்படுவதை கீழுள்ள படத்தில் காணலாம்.


News by - நகராட்சி மன்றம் திருகோணமலை
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலை நகர எல்லைக்குள் வீதி ஓரத்தில் பொருட்களை வைத்துள்ளோர் அதனை உடனடியாக அகற்ற Description: Rating: 5 Reviewed By: GS My

ad

Scroll to Top