Latest News

ஐக்கிய சுய தொழிலாளர் அபிவிருத்தி சங்கமும், திருகோணமலை - கீழ் வரும் நிபந்தனைகள் சேர்க்கப்டவுள்ளன.


இன்று காலை ஐக்கிய சுய தொழிலாளர் அபிவிருத்தி சங்கமும், திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையமும் ஏற்பாடு செய்திருந்த பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம் சம்பந்தமான கலந்துரையாடலொன்று காலை 9.30 மணியளவில் கிறீன் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் போது அநாகரிகமான முறையில் முடிவெட்டுதலை நிறுத்த வேண்டும் என பொலிஸாராலும் இரு பிரதான பாடசாலை அதிபர்களாலும் கூறப்பட்டதற்கு அமைய 2019 ஆம் ஆண்டிற்கான வியாபார உரிமம் வழங்கப்படும் போது கீழ் வரும் நிபந்தனைகள் சேர்க்கப்டவுள்ளன.
1. 18 வயதிற்கு குறைந்த மாணவர்களுக்கு 
பாடசாலை கலாசாரத்திற்கு ஏற்ற 
வகையில் சிகை அலங்காரம் செய்யப்படல் 
வேண்டும்.
2. சவர அலகுகள் ஒவ்வொருவருக்கும் புதிய 
அலகுகள் பயன்படுத்தல் வேண்டும்.
3. முடி திருத்தும் போது அணியப்படும் அங்கி 
நாளாந்தம் சுத்தமாக்கப்பட்டதாக இருத்தல் 
வேண்டும்.
4. தொழில் நிலையம் திறக்கும் நேரம் காலை 7.00 
மணி முதல் இரவு 9.00 மணி வரை மட்டுமே.
5. தொழில் நிலையத்தில் இருந்து வருகின்ற 
கழிவுகள் பொலித்தீன் பைகளில் 
அடைக்கப்பட்டு சுகாதாரமான முறையில் 
அகற்றப்படல் வேண்டும்.
6. முடி திருத்தும் நேரத்தில் புகைத்தல் வெற்றிலை 
பாக்கு பாவனை என்பன தவிர்க்கப்படல் 
வேண்டும்.

மேற்கூறிய நிபந்தனைகளுடன் 2019 ம் ஆண்டுக்கு வியாபார உரிமம் வழங்கப்பட நகரசபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் நிரூபிக்கப்படுமிடத்து அவர்களது வியாபார உரிமம் இரத்துசெய்யப்படும்.
இத்தீர்மானத்தை கூட்டத்திற்கு சமூகமளித்த சகல உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.
தலைவர்
நகராட்சி மன்றம்
திருகோணமலை.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஐக்கிய சுய தொழிலாளர் அபிவிருத்தி சங்கமும், திருகோணமலை - கீழ் வரும் நிபந்தனைகள் சேர்க்கப்டவுள்ளன. Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top