728x90 AdSpace

Latest News

ad

திருகோணமலை நகரசபை எடுத்த அதிரடி முடிவு!



பொலிவுறும் திருகோணமலை துறைமுக அழகை பொதுமக்கள் கண்களுக்கு பார்த்து பரவசப்பட திருகோணமலை நகரசபை எடுத்த அதிரடி முடிவு!
திருகோணமலை உட்துறைமுக வீதியின் துறைமுக பொலிஸ்நிலையத்திலிருந்து இலங்கை வங்க வரை துறைமுக பக்கமாக காணப்படும் பழைய இடிந்த கட்டடங்களினால் இவ் இயற்கை துறைமுகத்தின் அழகை பாா்க்க முடிவதில்லை. எனவே இதனை கருத்திற்க்கொண்டு முதற்கட்டமாக நகரசபைக்கு உாித்தான பழைய கட்டடம் ஒன்று உடைத்து அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
மீதமாக துறைமுக பொலிஸிற்கு அருகிலுள்ள மரத்தாலான கட்டடத்தை அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடா்பாக துறைமுக பொலிஸாருடன் கதைத்து அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளதுடன், அக்கட்டடமும் விரைவில் அகற்றப்படவுள்ளது.
மேலும் ஏனைய கட்டடங்களுக்கும் சம்பந்தப்பட்ட கட்டட உாிமையாளா்களுடன் தொடா்பு கொண்டு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. படத்தில் காட்டப்பட்ட இறங்குதுறைத்தளம் மிகவும் பழமை வாய்ந்தது. இதன் கூரைகள் யாவும் பழுதடைந்துள்ளது எனவே இறங்குதுறையின் தளத்தை தவிர ஏனைய பகுதிகளையும் அகற்றி இந்த இறங்குதுறைக்கு உாிமை கோரும் அரச நிறுவனத்தின் அனுமதியைப்பெற்று இறங்குதுறை தளத்தை புனரமைப்பதற்கு திட்டமிட்டிருப்பதுடன், வரைபடங்கள் தயாாிக்க நகரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளது.






  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலை நகரசபை எடுத்த அதிரடி முடிவு! Description: Rating: 5 Reviewed By: GS My

ad

Scroll to Top