Latest News

கின்னியா - கடற்படை, ஆர்ப்பாட்டக்கரரிடையே மோதல் - 12 கடற்படையினர் காயம்


கின்னியா - கந்தல்காடு வலிமங்கடே  பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோது  இளைஞர்கள்  இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் ஏற்பட்ட மோதலில் 12 கட்றபடையினர் காயமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். 
கின்னியா - பாலாறு பாலத்திற்கு  அண்மையில் சட்டவிரோதமான மணல் அகழ்வு  தொடர்பாக இன்று காலை 10 மணியளவில்  கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடற்படையினர் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர். 
இதையடுத்தே கடற்படையினர் சட்டவிரோத மணல் அகழ்வில்  ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட சமயத்தில் மூவர் ஆற்றில் பாய்ந்து தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தப்பி சென்றுள்ள நிலையில்  இருவர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர். 
இந்த சம்பவத்தையடுத்து கின்னியா - பாலாறு பாலத்திற்கு அண்மையில் கடற்படையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 
இதன்போது  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 
அதேபோன்று கின்னியா பொலிசாரும் விஷேட அதிரடைபடையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இதன்போது  12  கடற்படையினர் காயமடைந்துள்ளதுடன், இதில் படுகாயமடைந்த  04 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கபட்டுள்ளனர். 
அத்ததுடன், இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிண்ணியா பொலிசார் உட்பட பொலிஸ்  அதிரடிப்படையினர் ஒன்றிணைந்து கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கின்னியா - கடற்படை, ஆர்ப்பாட்டக்கரரிடையே மோதல் - 12 கடற்படையினர் காயம் Description: Rating: 5 Reviewed By: GS My
Scroll to Top