728x90 AdSpace

Latest News

திருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் தொடக்கி இன்றோடு நிறைவடைந்துள்ளன.
ஏறத்தாழ 5000 உறுப்பினர்கள் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 52 வட்டாரக் கிளைகளும் ஆறு தோட்டக் கிளைகளும், ஒரு மாவட்டக் கிளையும் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டக்கிளையின் தலைவராகத் சண்முகம் குகதாசன் (குச்சவெளிக்கோட்டம்), செயலாளராகத் கந்தசாமி செல்வராசா (நகரக் கோட்டம்), பொருளாளராக இராமலிங்கம் இரத்தினசிங்கம் (மூதூர்க் கோட்டம் ), துணைத்தலைவர் விஜயானந்தம் விஜயகுமார் (தம்பலகாமம் கோட்டம்), துணைச் செயலாளர் சின்னத்துரை பொன்னம்பலம் (வெருகல் கோட்டம்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கு. விஷ்ணு, பா. சந்திரமோகன் (குச்சவெளிக் கோட்டம்), நா.இராசநாயகம், க. கோகுலராசா (நகரக் கோட்டம்) சி .பஞ்சலிங்கம், சி.சின்னராசா (தம்பலகாமம் கோட்டம்) சி. தர்சன் , ஆ.செல்வநாயகம் (மூதூர்க் கோட்டம்) ச.வியகாந்த், க .ஜெயராசா (வெருகல் கோட்டம்) வெ .சுரேஷ்குமார், க. .ஜெயகாந்தராசா, கா.கமலன் (பட்டினமும் சூழலும் கோட்டம்) , ஆகியோர் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி தெரிவுகள் நடைபெற்ற கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைரெட்னசிங்கம் தலைமை தாங்கினார். இவரோடு ஏழு மறு சீரமைப்புக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலை மாவட்டத் தமிழரசுக்கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top