728x90 AdSpace

Latest News

திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டரங்கின் உடற்பயிட்சிக் கூடம் தீக்கிரையாகியுள்ளது.




திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டரங்கின் உடற்பயிட்சிக் கூடம் இன்று காலை தீக்கிரையாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

உள்ளக விளையாட்டரங்கின் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அதன் கட்டுமானப்பணிகள் கடந்த 2015ம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அதனை அடுத்து குறித்த மைதானமானது இன்னமும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்நிலையிலேயே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த தீவிபத்தின் காரணமாக உடற்பயிட்சிக் கூடத்தினுள் வைக்கப்பட்டிருந்த 3 வருடங்களுக்கும் அதிகமாக விளையாட்டுத் தாவைகளுக்கு உபயோகிக்காத பொருட்கள் அனைத்தும் தீயினால் கருகி சேதமடைந்துள்ளது.
தீக்கான காரணம் இன்னமும் அடையாளங்காணப்படாத நிலையில் திருகோணாமலை தலைமையகப் பொலிசார் மேலதிக விசாறணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டரங்கின் உடற்பயிட்சிக் கூடம் தீக்கிரையாகியுள்ளது. Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top