728x90 AdSpace

Latest News

DO நியமனத்தில் அநீதி: 14 பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு


தொழிலற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தினால் கட்டம் கட்டமாக வழங்கப்படும் தொழில்வாய்ப்பு திட்டத்திற்கு அமைய, கடந்த 20ஆம் திகதி அலரிமாளிகையில் தெரிவுசெய்யப்பட்ட 4,100 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
குறித்த சந்தர்ப்பத்தில் நியமனங்களைப் பெற்றுக்கொள்ள வந்த மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் சிலருக்கு ஏற்பட்ட அசாதாரண நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் தொழிலுக்காக அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதாக அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபோதும், குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வி;ல் இருந்த பெயர்ப்பட்டியலில் அவர்களின்; பெயர்கள் நீக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அநீதிக்கு உள்ளான 14 பட்டதாரிகள், தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பட்டதாரிகளுக்கான தேசிய மத்திய நிலையத்தின் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: DO நியமனத்தில் அநீதி: 14 பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top