728x90 AdSpace

Latest News

ஆசிய கோப்பை தொடரில் இந்த சாதனையை படைப்பாரா தோனி?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் யுனைடெட் அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இப்போட்டியில் ஆசிய கண்டத்தில் உள்ள 6 நாடுகள் பங்கேற்கின்றன. இப்போட்டி தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 16 பேர் கொண்ட அணியில் தோனியும் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 10000 ரன்களை எடுக்க இன்னும் 128 ரன்களே தேவை. இந்திய வீரர்களில் அதிக ரன்களை குவித்த நான்காவது வீரர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
தோனி இந்திய அணிக்காக 318 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9872 ரன்களை குவித்துள்ளார். இதில் 9 சதங்களும் 67 அரை சதங்களும் அடங்கும். அவர் ஆசிய லெவன் அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி 174 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 321 ஒருநாள் போட்டிகளில் ஆடி மொத்தம் 10046 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை எடுத்துள்ளனர். அவர்களின் விவரம்
1. சச்சின் டெண்டுல்கர் - 18426 ரன்கள்
2. சௌரவ் கங்குலி - 11221 ரன்கள்
3. ராகுல் டிராவிட் - 10768 ரன்கள்

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஆசிய கோப்பை தொடரில் இந்த சாதனையை படைப்பாரா தோனி? Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top