Header Ads

  • புதிய தகவல்கள்

    ஷகித் அப்ரிடி தொடர்பிலான பெரும் பரபரப்பான செய்தி...!!



    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகித் அப்ரிடி, இனி திரும்ப வரமாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகித் அப்ரிடி சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணி - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடினார்.

    இந்த போட்டியில் அப்ரிடி உலக லெவன் அணியின் தலைவராக விளையாடினார்.

    இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
     
    இப்போட்டி ஷகித் அப்ரிடியின் கடைசி சர்வதேச போட்டியாகும். 

    இந்த போட்டிக்கு பின் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்தார். 

    இந்த போட்டியின் போது, அப்ரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்து, மரியாதை செய்தனர். 

    இதுதான் நான் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும். 

    கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லண்டன் லொர்ட்ஸ் மைதானத்தில் கடைசிப் போட்டியை விளையாடுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. 

    இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது எனத் தெரிவித்தார்.

     பிரியாவிடைகொடுத்து, மரியாதை செய்த காட்சி இணைப்பு..

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad