Header Ads

  • புதிய தகவல்கள்

    அரச சேவைக்கு புதிதாக ஐந்தாயிரம் பேர் இணைப்பு


    அரச முகாமைத்துவ உதவியாளர் பதவி அரசாங்கத்துக்கோ, அதிகாரத்திலுள்ளவர்களுக்கோ சேவையாற்றுவதற்கான பதவியாக எவரும் கருத முற்படக்கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

    அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.

    பொது நிருவாக அமைச்சின் கீழ் இயங்கும் அரச முகாமைத்துவ சேவையில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் இன்று முதல் அரச ஊழியர்களாக உள்வாங்கப்பட்டுள்ளீர்கள். மக்களுக்குச் சேவையாற்றுபவர்களாகவும் நீங்கள் பதவியேற்றிருக்கின்றீர்கள். மக்களுக்கும், நாட்டுக்கும் பணிபுரிவதற்காகவே நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்று தெரிவித்த பிரதமர் , அரசின் திட்டங்களையும் அபிவிருத்தி முயற்சிகளையும் மக்கள் மத்தியில் கொண்டுசென்று அரசாங்கத்திற்கும் மக்களுக்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்தி நாட்டின் அரசியல், பொருளாதார ஸ்திர நிலையை உத்தரவாதப்படுத்தும் பாரிய பொறுப்பு உங்களுன்கு உண்டு எந்தவொரு திட்டத்திலும் முகாமைத்துவ உதவியாளர்களின்றி அதனை வெற்றிகொள்ள முடியாது தனியார்துறையை ஊக்குவித்து அதனூடாக அரச துறைக்கு ஈடான வேவைய்ப்புகளை பெற்றுக்கொடுக்க அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. வெளிநாட்டு தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் இதனை முன்னெடுக்கவுள்ளோம் என்றும் கூறினார்.

    அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நிர்வாகத்துறையை முன்னெடுப்பதன் மூலம் அடுத்த இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தில் எம்மால் உயர்ந்த நிலைக்குச் செல்லமுடியும் வரலாற்றில் முன்னொரு போதுமில்லாத விதத்தில் அதிகூடிய ஏற்றுமதியை 2017ல் மேற்கொள்ள முடிந்துள்ளதாகவும் 1900 மில்லியன் டொலர் தனியார்துறை முதலீடுகளை இதே ஆண்டில் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
    ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

    அரச சேவைக்கு புதிதாக ஐந்தாயிரம் பேரை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று (14) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
    அரச முகாமைத்துவ சேவை தரம் மூன்றுக்கு மேற்கூறப்பட்ட ஐந்தாயிரம் பேரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் கடந்த ஆண்டு (2017) நடத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையில் மாவட்ட மட்டங்களில் அதிக புள்ளிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.
    இலங்கையில் தற்போது சுமார் 14 இலட்சம் அரச ஊழியர்கள் சேவையில் உள்ளனர். நாட்டின் சனத்தொகையில் 15 பேருக்கு ஒரு அரச ஊழியர் என்றவகையில் சேவையில் உள்ளனர் என அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அடையாளங்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் அரச முகாமைத்துவ சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி, அவ்வமைச்சின் மேலதிக செயலாளர்களான பி.எம்.என் அபேகுணவர்தன ( அரச நிருவாகம்), இந்து ரத்நாயக்க (உள்நிருவாகம்), மாலா பஸ்நாயக்க (ஆய்வு) ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் கே.டீ.பீ.எம். கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad