Header Ads

  • புதிய தகவல்கள்

    6 பேர் பயணிக்கக் கூடிய புதிய முச்சக்கர வண்டி இலங்கையில் பாவனைக்கு!


    இலங்கையில் 6 பேர் பயணிக்க கூடிய முச்சக்கரவண்டி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தற்போது பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 4 பேர்கள் மாத்திரமே பயணிக்க முடியும். இந்நிலையில் 6 பேர் பயணிக்கக் கூடிய புதிய முச்சக்கர வண்டி ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது. இந்த முச்சக்கர வண்டியில் சாரதி மற்றும் 5 பேர் பயணிக்க முடியும். அதற்கமைய மேலும் 3 பேர் பயணிக்க கூடிய வகையில் இந்த புதிய முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்திற்கமைய 3 பயணிகள் மாத்திரமே ஒரு முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியும். எனினும் இந்த புதிய தயாரிப்பு மூலம் அதிக வசதிகள் மற்றும் இலகுவாக பயணம் மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad