Header Ads

  • புதிய தகவல்கள்

    ஸ்மித், வோர்னருக்கு ஒரு வருட போட்டித் தடை


    பென்கிராப்டிற்கு 9 மாத தடை
    பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பிரதித் தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஒரு வருட (12 மாதம்) போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில், நேரடியாக சம்பந்தப்பட்ட கெமரூன் பென்கிராப்டிற்கு 09 மாத போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    இச்சம்பவம் தொடர்பில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட், தென்னாபிரிக்கா சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, குறித்த மூவரையும் தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்புமாறு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இதனிடையே, குறித்த போட்டியின்போது, ஸ்மித் மற்றும் வோர்னரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதவியிலிருந்து நீக்கிய நிலையில், ஐ.பி.எல். அணி தலைமைப் பொறுப்புகளிலிருந்தும் அவர்கள் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    குறித்த விடயம் தொடர்பில் ஸ்மித்திற்கு சர்வதேச கிரிக்கெட் சபையினால் ஒரு போட்டித் தடை விதிக்கப்பட்டதோடு, போட்டிக்கான சம்பளம் முழுவதையும் அபராமாக செலுத்துமாறு தண்டனை விதிக்கபட்டதோடு, பென்கிராப்டிற்கு போட்டிக்கான சம்பளத்தின் 75 வீத அபராதமும் விதிக்கப்பட்டது.
    ஸ்மித்தின் தலைமையில் அவுஸ்திரேலிய அணி 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 போட்டிகளில் வெற்றி பெற்றதோடு, 10 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்ததோடு, 06 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad