728x90 AdSpace

Latest News

ad

எச்சரிக்கை..! இந்த குற்றங்களுக்கு 20 வருடங்கள் சிறை : பொலிஸார் அறிவிப்பு


நாட்டில் அவ­ச­ர­கால நிலைமை பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்ள நிலையில், உயி­ரி­ழப்­புக்­களை ஏற்­ப­டுத்தல், காயங்­களை ஏற்­ப­டுத்தல், சொத்து சேதங்­களை ஏற்­ப­டுத்தல், பாலியல் ரீதி­யி­லான வன்­மத்தில் ஈடு­படல், கொள்­ளை­ய­டித்தல், இனங்­க­ளுக்கு இடையே முறுகல் நிலையை தோற்­று­வித்தல், இன முறு­கலை தூண்டும் வண்ணம் கட்­டு­ரைகள், எழுத்­துக்­களை சமூக வலைத்­த­ளங்கள் உள்­ளிட்­ட­வற்றில் பதிவு செய்தல், அவற்றை பகிர்தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கைகள் பாரிய குற்­ற­மாக  அறி­விக்­கப்பட்­டுள்­ளன. 
இந்நிலையில் அவை தொடர்பில் அவ­ச­ர­கால சட்ட விதி­களின் பிர­காரம் 20 வருட சிறைத் தண்­ட­னையோ, அல்­லது ஆயுள் தண்­ட­னையோ பெற்­றுக்­கொ­டுக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர நேற்று இரவு அறி­வித்தார். தேசிய பாது­காப்­புக்­கான  ஊடக மத்­திய நிலை­யத்தில் இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் சுமித் அத்­த­பத்து, விமா­னப்­படை பேச்­சாளர் குறூப் கப்டன் கிஹான் சென­வி­ரத்ன, கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் தினேஷ் பண்­டர ஆகி­யோ­ருடன் விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்­தியே அவர் இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்தார்.
இதன்­போது அவர் மேலும் கூறி­ய­தா­வது,
 கடந்த  சில நாட்­க­ளாக நாட்டின் சில பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற விரும்­பத்­த­காத நட­வ­டிக்­கைகள், அவை சார்ந்த உளவுத் துறை அறிக்­கை­களை மையப்­ப­டுத்தி அர­சாங்கம் இன்று ( நேற்று ) கொள்கை ரீதியில் தீர்­மானம் எடுத்து அவ­ச­ர­கால சட்­டத்தை அமுல் செய்­துள்­ளது.
 நேற்று பிற்­பகல் 2.45 மணி முதல் பொது மக்கள் பாதுகாப்பு கட்­டளைச் சட்டம் அமு­லுக்கு வந்த நிலையில் இந்த அவ­சர கால நிலை­மைகள் தொடர்­பி­லான 2 ஆம் மற்றும் 5 ஆம் அத்­தி­யா­யங்கள் அமு­லுக்கு வரு­கின்­றன.
உயி­ரி­ழப்­புக்­களை ஏற்­ப­டுத்தல், காயங்­களை ஏற்­ப­டுத்தல், சொத்து சேதங்­களை ஏற்­ப­டுத்தல், பாலியல் ரீதி­யி­லான வன்­மத்தில் ஈடு­படல், கொள்­ளை­ய­டித்தல், இனங்­க­ளுக்கு இடையே முறுகல் நிலையை தோற்­று­வித்தல், இன முறு­கலை தூண்டும் வண்ணம் கட்­டு­ரைகள், எழுத்­துக்­களை சமூக வலைத்­த­ளங்கள் உள்­ளிட்­ட­வற்றில் பதிவு செய்தல், அவற்றை பகிர்தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கைகள் பாரிய குற்­ற­மாக  அறி­விக்­கப்பட்­டுள்­ளது. இந் நிலையில் அவை தொடர்பில் அவ­ச­ர­கால சட்ட விதி­களின் பிர­காரம் 20 வருட சிறைத் தண்­ட­னையோ, அல்­லது ஆயுள் தண்­ட­னையோ பெற்­றுக்­கொ­டுக்க முடியும்.
 இதற்கு மேல­தி­க­மாக இவ்­வா­றான நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வோ­ரையும், அதற்கு உதவி ஒத்­தாசை வழங்­குவோர், சதி செய்வோர் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக  முப்­ப­டையின் அனைத்து வீரர்­க­ளுக்கும் கைது செய்யும் அதி­காரம் வழங்கப்பட்டுள்ளது.
இரா­ணு­வத்­தினர் ஒரு­வரை இச்­சட்­டத்தின் கீழ் கைது செய்தால், 24 மணி நேரத்தில் சந்­தேக நபர்­களை அவர்கள் பொலி­ 
ஸா­ரிடம் ஒப்­ப­டைப்­ப­துடன், பொலிஸார் அவர்­களை நீதி­மன்றில் முன்­னி­லை­ப்ப­டுத்­துவர். குறித்த சந்­தேக நபர்கள் மீது நீண்ட விசா­ரணை தேவைப்­படின், பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு சந்­தேகநபரை 14 நாட்கள் தடுத்து வைத்து விசா­ரிக்கும் உத்­தரவில் கையெ­ழுத்­தி­டும் அதி­காரம் வழங்­கப்பட்­டுள்­ளது.
 இந்த அவ­சரகால நிலை­மை­களின் போது சட்­டத்தை நிலை நாட்­டு­கையில்,  குற்றம் புரிந்­தோரின் தரா­தரம், மதம், இனம், அர­சியல் கொள்கை, கட்சி பேதங்­களை பார்க்க வேண்டாம் என ஜனா­தி­பதி பாது­காப்பு தரப்­புக்கு ஆலோ­சனை வழங்கி­யி­ருந்தார். இந்த அவ­சர கால நிலை­மை­யா­னது 7 நாட்­க­ளுக்கு செல்­லு­ப­டி­யாகும் நிலையில் அதன்­பின்னர் நிலை­மை­களை அவதானித்து அது தொடர்பில் அடுத்த கட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
 அத்­துடன் அவ­சரகால நிலை­மை­களின் போது, குற்றச் செயல் தொடர்பில் தகவல் தெரிந்­த­வர்கள் அது தொடர்­பி­லான தக­வல்­களை பொலி­ஸா­ருக்கோ பாது­காப்பு தரப்­புக்கோ வழங்குவது கட்­டா­ய­மான பொறுப்­பாக்­கப்பட்­டுள்­ளது. அதனை தட்­டிக்­க­ழிப்­பது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும்.
 இந்நிலையில் தற்­போது, கண்டி தெல்­தெ­னிய, திகன பகு­தி­களில் பொலிஸார் அமை­தியை ஏற்­ப­டுத்த பூரண பாது­காப்பை வழங்கியுள்ள நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் எதிராக பொதுச் சொத்து, சர்வதேச சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான இணக்கப் பாட்டு சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ்  குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.  சமூகங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் எவராக இருப்பினும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: எச்சரிக்கை..! இந்த குற்றங்களுக்கு 20 வருடங்கள் சிறை : பொலிஸார் அறிவிப்பு Description: Rating: 5 Reviewed By: ST

ad

Scroll to Top