Header Ads

  • புதிய தகவல்கள்

    காதலர் தினத்தில் சிம்பு-ஓவியா அறிவித்த முக்கிய அறிவிப்பு



    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு இசையமைத்த பாடல் ஒன்றை ஓவியா பாடியது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த நிலையில் தற்போது முதல்முறையாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரியவுள்ளனர்.

    'காஞ்சனா 3' படத்தில் நடித்து வரும் ஓவியா தற்போது '90ml' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அனு உதீப் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'குளிர் 100' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது

    நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவும், அந்தோணி எடிட்டிங் பணியும் செய்யவுள்ளனர். இந்த படம் லெஸ்பியன் சம்பந்தப்பட்ட படம் என்று கூறப்பட்டாலும் இதுகுறித்து படக்குழுவினர் உறுதி செய்யவில்லை

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad