என்ன கண்ணு.. சிங்கக் குட்டியை பக்கத்தில் வைத்துக் கொண்டு சைன் போட்ட தல! #WhistlePodu - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Thursday, January 4, 2018

என்ன கண்ணு.. சிங்கக் குட்டியை பக்கத்தில் வைத்துக் கொண்டு சைன் போட்ட தல! #WhistlePodu


சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார் டோணி. அதற்கான ஒப்பந்தத்தில் டோணி கையெழுத்திடும் போது அவரது செல்ல மகள் ஸிவா அப்பாவை எந்த தொந்தரவும் செய்யாமல் சமத்தாக நிற்கும் வீடியோ வைரலாகியுள்ளது. சூதாட்டம் புகார் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டுடன் அந்த தடை நிறைவடைந்தது. இதையடுத்து இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் விளையாடும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் மகேந்திர சிங் டோணி இடம்பிடித்துள்ளார். அணியில் 3 வீரர்களை தக்கவைக்க முடியும் என்பதால் டோணி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை அணி மீண்டும் தக்க வைத்துள்ளது.

இதில் டோணி கையெழுத்திடும் போது அவரது மகளி ஸிவா, அப்பாவை எந்த தொந்தரவும் செய்யாமல் சமத்தாக அருகில் ஏதையோ கையில் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

டோணியின் மகள் பாட்டுப்பாடுவது, அப்பாவுடன் விளையாடுவது என இதுவரை ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதன்மூலம் சமூக வலைதளங்களில் அப்பா டோணிக்கு இணையாக மகள் ஸிவாவும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages