Header Ads

  • புதிய தகவல்கள்

    Final: SLvBAN; முக்கோணத் தொடரை வென்றது இலங்கை


    • 2016 இற்கு பின் முதலாவது ஒரு நாள் தொடர் வெற்றி
    • அறிமுக போட்டியில் ஷெஹான் மதுசங்க ஹெட்ரிக்; இரண்டாவது இலங்கையர்
     
    இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்பே அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் இடம்பெற்று வந்த முக்கோண கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
    இன்று (27) டாக்காவின் மிர்புர் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
    நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்றது.
    பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
    பங்களாதேஷ் அணி வீரர் சகீப் அல் ஹசன் காயம் காரணமாக துடுப்பெடுத்தாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    இன்றைய (27) போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷெஹான் மதுசங்க, மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து (ஹெட்ரிக்) பெற்றுக் கொண்டார்.
    39.5 மஷ்ரபி மோர்டசா
    39.6 ருபல் ஹொசைன்
    41.1 மஹ்முதுல்லாஹ்
    அந்த வகையில் தனது முதல் போட்டியிலேயே ஹெட்ரிக் சாதனை படைத்த நான்காவது வீரர் எனும் பெருமையை இவர் பெற்றுக் கொண்டார். (ஏனையோர் தைஜுல் இஸ்லாம், ககிசொ ரபடா, வனிந்து ஹசரங்க) குறித்த நால்வரும் கடந்த நான்கு வருடங்களிலேயே இந்த சாதனையை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இதேவேளை, இலங்கை அணி கடந்த 2016 நவம்பரில் சிம்பாபேயில் இடம்பெற்ற முக்கோணத் தொடருக்கு(மேற்கிந்திய தீவுகள்) பின்னர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரொன்றை வெற்றி கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
    பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய இலங்கையின் முன்னாள் வீரர் சந்தி ஹத்துருசிங்க, கடந்த மாதம் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பங்களாதேஷ் 142
    மஹ்முதுல்லாஹ் 76
    முஸ்பிகுர் ரஹீம் 22
    ஷெஹான் மதுசங்க 3/26
    துஷ்மநத சமீர 2/17
    அகில தனஞ்சய 2/30
    போட்டியின் நாயகன்: உபுல் தரங்க (56 ஓட்டங்கள், 2 பிடியெடுப்புகள்)
    தொடரின் நாயகன்: திசர பெரேரா (11 விக்கெட்டுகள், 134 ஓட்டங்கள்)
    இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் ரி20 தொடர் எதிர்வரும் புதன்கிழமை (31) ஆரம்பமாகின்றது. இரு அணிகளுக்கிடையிலும் இரு டெஸ்ட் மற்றும் இரு ரி20 போட்டிகள் இடம்பெறவுள்ளது.
    இத்தொடர் பெப்ரவரி 18 இல் இடம்பெறவுள்ள ரி20 போட்டியுடன் நிறைவடைகின்றது.

    Final: SLvBAN; வெற்றி இலக்கு 222; பங்களாதேஷ் 80/4 (பி.ப 4.16)

    பங்களாதேஷில் இடம்பெற்று வரும் முக்கோண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தற்போது (27) இடம்பெற்று வருகின்றது.
    இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி , முதலில் துடுப்பெடுத்தாடியது.
    அதன் அடிப்படையில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்றது.
    இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க ஆகக் கூடுதலாக 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
    இலங்கை 221/10
    உபுல் தரங்க 56
    தினேஷ் சந்திமால் 45
    நிரோஷன் திக்வெல்ல 42
    பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் அணி 23 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.
    பங்களாதேஷ் அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 27 ஓவர்களில் 142 ஓட்டங்களை பெற வேண்டும்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad