திருகோணமலை - சூதாடிய நால்வர் கைது - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/08/2018

திருகோணமலை - சூதாடிய நால்வர் கைது

திருகோணமலை, சேருநுவர, நீணாக்கேணி காட்டுப் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நால்வர், நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக சிலர் பணத்துக்கு சூதாடி வருவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சூது விளையாடிய இடத்திலிருந்து ஒரு தொகை பணம், பாய், சூது விளையாடப் பயன்படுத்தப்படும் தாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, சேருநுவர  பொலிஸர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages