Header Ads

  • புதிய தகவல்கள்

    தாதியர்களுக்கு இன்ஜே பல்கலைக்கழகத்தில் பயிற்சி

    தாதியர்களுக்கு கொரியா இன்ஜே பல்கலைக்கழகத்தில் பயிற்சியைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்டல் தொடர்பிலான விடயங்களுக்கான புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
    சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில் சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

    சுகாதார அமைச்சும், இன்ஜே பல்கலைக்கழகத்திற்கும் இடையில் 2013ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை 2017ம் ஆண்டுடன் நிறைவு பெற்றது. புதிய உடன்படிக்கைக்கு அமைவாக தாதியர் கல்வி, திடீர் சிகிச்சை தாதியர் சேவை, தாதியர் பட்டப்படிப்புக் கற்கைநெறி போன்ற வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளன.

    கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு இணைந்ததாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட தாதியர் பீடத்திற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் வழங்குவதற்கு இன்ஜே பல்கலைக்கழகம் உடன்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சுகாதார அமைச்சர் கொரியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad