Latest News

ஜட்டியால் பரிதாபமாக இறந்த நபர் - அட என்ன கொடுமை இது?!

நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா, வர வேண்டிய நேரத்துல கரக்டா வருவேன்... இது ரஜினி பேசிய வசனம் மட்டுமல்ல. இது மனிதர்களின் வாழ்வில் மரணம் என்ற நோக்கத்தில் பார்த்தாலும் சரியாக தான் இருக்கும்.
அந்நபர் நன்றாக தான் இருந்திருப்பார். ஆனால், எதிர்பாராத வகையில் விபத்தில் மரணம் அடைந்திருப்பார். அட காலையில கூட பார்த்தேன் மனிஷன் கல்லு மாறி இருந்தாரு... எப்படிப்பா இருந்தாரு என நாமே நம் வாழ்வில் சில தருணங்களை கடந்து வந்திருப்போம்.
ஆம்! மரணம் ஒருவரை எப்படி நெருங்கும் என்பதை யாராலும் அறிய முடியாது.
ஆயினும், சற்றே மோசமான வழியில் சிலர் உலகில் தங்கள் மரணத்தை கண்டிருக்கிறார்கள், படிக்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், உள்ளூர நினைத்துப் பார்த்தல்.. அட, மனுஷனுக்கு இப்படியா சாவு வரும் என வருந்த வைக்கும்...

பிரன்ஹா

பொலிவியாவின் ரொசாரியோ டெல் யாதா எனும் நகரில் நடந்தது இந்த சம்பவம். கடந்த 2011ல் 18 வயதே நிரம்பிய இளைஞன் ஒருவன் குடி போதையில், பிரன்ஹா எனும் கொடூரமான மீன்கள் பாதிப்பு இருந்த குளத்தில் குதித்து உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் உண்டாகி பரிதாபமாக உயிரிழந்தான்.

தற்கொலை?

விசாரணையின் போது மீன் பிடி தொழில் செய்து வந்த இளைஞன் தற்கொலைக்கு முயற்ச்சித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பிரன்ஹா மீன்களால் மனித பலி ஏற்படுவது எல்லாம் நம்பும்படி என சிலர் விவாதித்துக் கொண்டிருக்கையில், இந்த இளைஞரின் மரணம் சோகத்தை உண்டாக்கியது.

தாடியில் வழுக்கி...

ஹன்ஸ் ஸ்டெய்னிங்கர் என்பது அவருடைய பெயர். இவர் 1560களில் வாழ்ந்து வந்த நபராவார். இவர் ஆசையாக வளர்த்து வந்த தாடியே இவரது மரணத்திற்கு காரணமானது. ஆம், எப்போதுமே இவர் வெளியே செல்லும் போது தந்து தாடியை ஒரு லெதர் பவுச்சில் சுற்றி முடிந்துக் கொண்டு தான் செல்வார்.

தீவிபத்து...

ஒரு நாள் இவர் இப்படி முடிந்துக் கொள்ளாமல் சென்ற நேரம் பார்த்து, தீவிபத்து ஏற்பட்டது. அதிலிருந்து தப்பிக்க இவர் ஓட முயற்சித்த போது தனது நாலரை அடி தாடியில் சிக்கி கால்தடுக்கி விழுந்து, கழுத்துப் பகுதியல் முறிவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமண போட்டோஷூட்!

இது மிகவும் சோகமான நிகழ்வு. அப்போது தான் முப்பது வயதுமிக்க அந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி சில நேரம் கழிந்திருக்கும். போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட் எடுக்க நீரின் அடியில் சென்றார் அவர்.

ஆடைக் காரணம்...

இந்த சம்பவம் மாண்ட்ரீல் அருகே இருக்கும் ஓவரௌ ஆறு பகுதியில் நடந்தது. நீரில் படம் எடுக்க இறங்கிய அந்த திருமணமான பெண், எதிர்பாராத விதமாக திருமண உடையின் அதிக எடையின் காரணாமாக நீரில் மூழ்கிவிட்டார்.
அந்த ஆடை நீரை அதிகமாக உறிஞ்சி எடை அதிகமாக கூடியதால், அவரால் மேலே வர இயலவில்லை. பரிதாபமாக அந்த இடத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

உள்ளாடை காரணாமாக...

wedgie என்பது உள்ளாடியை இழுத்து விளையாடும் ஒரு கேலி ஆட்டமாக இருந்து வருகிறது. உள்ளாடையின் எலாஸ்டிக் பகுதியை இழுத்து ஒரு நபரை கேலி செய்து விளையாடுவதை இப்படி குறிப்பிடுகிறார்கள்.

மூச்சுத் திணறல்

ஓக்லஹோமா என்ற பகுதியில் ஸ்டெப் ஃபாதரிடம் மற்றும் ஸ்டெப் மகன் இப்படியாக விளையாட போய், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில், தலையில் அடிப்பட்டி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த ஸ்டெப் ஃபாதர் உயிரிழந்தார்.

தவறாக...

ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண்மணி இறந்துவிட்டார் என தவறாக மருத்துவர்கள் கூற, அவரை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. சவப்பெட்டியோடு அவரை புதைக்க முற்பட்ட போது, அவர் உயிர்தெழுந்து, உள்ளிருந்து, சவப்பெட்டியை தட்டியுள்ளார்.

மாரடைப்பு!

இதன் காரணத்தால், சுற்றி இருந்த அனைவரும் பதட்டம் அடைந்தனர். அவசர அவசரமாக திறந்து பார்த்த போது அவர் இறந்து கிடந்தார். தான் எங்கே இருக்கிறோம் என அறியாத பதட்டத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணத்தால் அந்த பெண்மணி உயிரிழந்தார்.

மூழ்கி இறந்த நபர்..

நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் வருடா வருடம், நீரில் முதல் முறை மூழ்கும் கொண்டாட்டம் நிகழ்வும். இதில் கலந்துக் கொள்ளும் நபர்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்ல. நீச்சல் குளத்தில் உயிரை காக்கும் காவலர்கள் இருப்பார்கள்.

கண்டுகொள்ளவில்லை!

ஆகையால் தைரியமாக யார் வேண்டுமானாலும் நீரில் இறங்கலாம். ஆனால், தவறுதலாக ஒரு நபர் நீரில் மூழ்கி போராடிக் கொண்டிருக்க, அவரை காவலர் என கருதி யாரும் கண்டுக் கொள்ளவில்லை. அவர் இருந்த இடத்தில் வேறு காவலர்களோ, அல்லது பங்கேற்பாளர்களோ இல்லாமல் போன காரணத்தால், அவர் இறந்ததை யாரும் அறியவில்லை.
பிறகு, நீண்ட நேரம் கழித்து, யாரோ ஒருவர், நீரின் அடியே ஒரு உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைய, அவர் அங்கே இறந்ததை அறிந்தனர்.

மாடு விழுந்து!

இது மிகவும் விசித்திரமான மரணமாகும். இப்படி ஒரு மரணம் நிகழ்வும் என கனவிலும் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.ஜாவோ மரியா டிசௌசா என்பது அவரது பெயர். அவர் படுக்கை அறையில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார். அந்த வேளையில், அவர் வளர்த்த கூரையின் மேலிருந்து கீழே விழுந்து ஜாவோ மரியா உயிரிழந்தார்.

எட்டு பேர்!

இவரது வீடு மலை போன்ற சாய்வான மேட்டுபகுதியில் இருந்திருக்கிறது. மேட்டுப்பகுதி வழியாக மேலே ஏறிய மாடு, எப்படி எங்க இறங்குவது என தெரியாமல், கூரை மீது கால் வைத்து, கீழே விழுந்துவிட்டது.. ஏறத்தாழ எட்டடி உயரத்தில் இருந்து மாடு கீழே படுத்திருந்த ஜாவோ மரியா மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் அருகே படுத்திருந்த எட்டு பேர் உயிர் பிழைத்தனர் என கூறப்படுகிறது.

எரிமலை!

கிரேக்க நாட்டை செந்த பழங்கால தத்துவவாதி எம்படாக்ளீஸு. இவர் எரிமலைக்குள் குதித்து கடவுளாக போகிறேன் என கூறிக் கொண்டு உள்ளே குதித்து மரணம் அடைந்தார். அப்போது அவர்களுக்கு எரிமலையின் தாக்கமானது எப்படி இருக்கும், எந்த அளவிற்கு இருக்கும் என்ற அறிவின்மையே இந்த உயிரிழப்பிற்கு காரணமாகும்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஜட்டியால் பரிதாபமாக இறந்த நபர் - அட என்ன கொடுமை இது?! Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top