மோட்டார் வாகனங்களுக்கான புதிய வாகன இலக்க தகடுகள் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/04/2018

மோட்டார் வாகனங்களுக்கான புதிய வாகன இலக்க தகடுகள்


மோட்டார் வாகனங்களுக்கான புதிய வாகன இலக்க தகடுகள் நேற்று முதல் வழங்கப்பட்டுவருகின்றன.

நான்கரை வருடங்களுக்கு பின்னர் இந்த புதிய இலக்க தகடுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது. CA தொகுதி இலக்கத்தின் கீழ் இதுவரையில் மோட்டார்வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டு இலக்கங்கள் வழங்கப்பட்டன. இதன் கீழ் 247000 மோட்டார் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

புதிய தொகுதி இலக்கம் CBA என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது இலக்க தகடு வழங்கும் நிகழ்வு மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே. ஜகத் சந்திரசிறி தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிக்கையில், CA தொகுதிக்கு பதிலாக CB தொகுதி பதிவு இலக்கங்கள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் முதலாவது CBA0001 என்ற இலக்க தகடு நேற்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக புதிய மோட்டார் கார்களுக்கான பிரிவில் வாகனங்கள் CBA என்று பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நான்கரை வருடங்களுக்கு பின்னர் தான் 246000 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னர் இங்கு குறிப்பிடப்படும் இந்த இலக்கத்தை வழங்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும்தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages