இலங்கையில் சர்வதேச தரத்திலான நவீன போக்குவரத்து நிலையம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/11/2018

இலங்கையில் சர்வதேச தரத்திலான நவீன போக்குவரத்து நிலையம்

இலங்கையில் சர்வதேச தரத்திலான நவீன போக்குவரத்து நிலையமொன்று அமைக்கப்பட்டுவருகின்றது.
பஸ் பயணத்திற்கான அனுமதி பற்றுச்சீட்டுடன் ரயிலிலும் பயணம் செய்யக்கூடிய வசதி இதன்மூலம் ஏற்படுத்தப்படும். 845 மில்லியன் ரூபா செலவில்  கொட்டாவ மெகும்புற என்ற இடத்தில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்மூலம் பல வழிகளுக்கான போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் பிரதி பணிப்பாளர் நாளக்க திசாநாயக்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இதுவே இலங்கையில் அமைக்கப்படும் முதலாவது  பலவசதிகளை [Multi Purpose] இலக்காகக் கொண்ட மத்திய போக்குவரத்து நிலையமாகும்.


மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி சபையின் வழிகாட்டலின் கீழ் ஜப்பான சர்வதேச புரிந்துணர்வு திட்டத்தின் உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.ரயிலும் பஸ்சும் இணைந்த சேவையொன்று இலங்கையில் இதுவரையில் இல்லை. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிர்மாண பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் களனிவெலி ரயில் பாதை மற்றும் ஹைலெவல் பாதை மற்றும் தெற்கு அதிகவேக பாதையினுடாக செல்லும் பஸ்களை ஒன்றிணைத்த மத்திய நிலையமாக செயற்படுவதாகும்.இதே போன்ற ரயில் மற்றும் பஸ் சேவைகளையும் இணைப்பதனாலேயே இதற்கு மல்டிபேப்பஸ் சேவை மத்திய நிலையமென்று [Multi-Purpose Transport Center]பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையிலேயே இந்த சேவை மத்திய நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கும் இந்த இடத்திற்கு வந்த பிறகு ஒரே பயணச்சீட்டில் தமக்கு தேவையான இடத்திற்கு பயணிக்க முடியும் .இந்த வருட இறுதிக்குள் இந்த வசதியை பொது மக்கள் பெற்று கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சும் இணைந்தே இந்த திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.மாகும்புற மல்டிப்பேபஸ் மத்திய நிலையம் திறக்கப்பட்ட பின்னர் நெடுஞ்சாலையின் முக்கியத்துவமாக இது திகழும். நெடுஞ்சாலை மற்றும் தெற்கு நெடுஞ்சாலைக்கு இது முக்கிய நுழைவாயில் மத்திய நிலையமாக அமையவுள்ளதுடன் இது முக்கிய கேந்திர நிலையமாகவும் இருக்கும். மேலும், ஹைலெவல் வீதியில் நிலவும் வாகன நெருக்கடிக்கு இது தீர்வாக அமையும்.
வெளிநாடுகளில் தனியார் வாகன போக்குவரத்திலும் பார்க்க பொது போக்குவரத்திற்கே முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்றே இலங்கையிலும் மேலும் பல நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மத்திய நெஞ்சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. றுவான் புற அதிவேக நெடுஞ்சாலையும் இவ்வாறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவை அனைத்திற்கும் இது முக்கியமானதாகவே அமையும்.இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து போக்குவரத்தும் இதனுடாகவே இடம்பெறும்.

கொழும்பின் முக்கிய போக்குவரத்து வீதிகள் ஹைலெவல் பாதையுடன் ஒன்றிணையும் வகையில் தெற்கு அதிவேகசாலை மற்றும் மாநகர போக்குவரத்து சேவை இதனுடாக ஆரம்பமாகும்.
இலங்கையின் சொகுசு ரயில் நிலையம் இங்கு அமைக்கப்படும். இது மின்சார வசதிகளை கொண்டதாக அமைந்திருக்கும். தனியார் நிறுவனம் ஒன்றிணைந்து களனி ரயில் பாதையில் மாரப்பல்ல நிலையம் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்படுகின்ற சகல வசதிகளும் கொண்டதான உயர்தரத்தில் அமைக்கப்படும் இந்த ரயில் நிலையம் மாகும்புற என பெயரிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages