இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ் பயணம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/04/2018

இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ் பயணம்

இரு சுற்றுத்தொடர்களில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் 13ஆம் திகதி பங்ளாதேஷ் பயணமாகவுள்ளது.ஒரு மும்முனை ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடரிலும், பங்ளாதேஷ் அணிக்கு எதிரான இருதரப்பு சுற்றுத்தொடரிலும் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.

மும்முனை ஒருநாள் சர்வதேச சுற்றுத்தொடர் 17ஆம் திகதி ஆரம்பமாகி 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இலங்கையுடன் பங்ளாதேஷ், ஸிம்பாப்வே அணிகள் பங்கேற்கின்றன. பங்ளாதேஷ் அணிக்கு எதிரான சுற்றுத்தொடரில் இரண்டு ரெஸ்ட் போட்டிகளும், இரண்டு ரி-20 போட்டிகளும் உள்ளடங்குகின்றன.

முதலாவது ரெஸ்ட் போட்டி ஜனவரி 31ஆம் திகதி ஆரம்பமாகும். முதலாவது ரி-20 போட்டி பெப்ரவரி 15ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages