பாரிய நிதிமோசடி ஆணைக்குழுவின் அறிக்ைக இன்று ஜனாதிபதியிடம் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/01/2018

பாரிய நிதிமோசடி ஆணைக்குழுவின் அறிக்ைக இன்று ஜனாதிபதியிடம்

17 அரச நிறுவனங்களின் மோசடி விசாரணை

கடந்த ஆட்சியில் பல அரச நிறுவனங்களில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் மற்றும் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தல் என்பன தொடர்பாக ஆராயும், பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்ைக இன்று(02) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுகிறது.

ஆணைக்குழுவின் தலைவர் சூரசேனவினால் கையளிக்கப்படும் இந்த அறிக்கை சுமார் ஆயிரம் பக்கங்களை கொண்டதாகும். கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் 17 அரச நிறுவனங்களில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அம்பாறையில் நடத்தப்பட்ட தேசத்துக்கு மகுடம் குறித்த அறிக்கை, அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் அறிக்கை, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறித்த அறிக்கை, காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை அறிக்கை, ரூபவாஹினி கூட்டுத் தாபனம் தொடர்பான அறிக்கை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை பற்றிய அறிக்கை, சதோச தொடர்பான அறிக்கை என்பனவும் இதில் அடங்குவதாக அறிய வருகிறது.

இதற்கு முன்னதாக மேலும் 17 நிறுவனங்கள் குறித்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages