பத்தாயிரம் தாதியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

1/03/2018

பத்தாயிரம் தாதியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

தாதியர் சேவையில் ஆண்களை இணைத்துக்கொள்வதற்கு சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தீர்மானித்துள்ளார்.

தாதியர் சேவையில் நிலவும் 10,000 வெற்றிடங்கள் நிரப்பும் வகையில் இவ்வாட்சேர்ப்பு நடத்தப்படவள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாதியர் சேவைக்கு இதுவரை 95 வீதம் பெண்களே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர், 5 வீதமானவர்களே ஆண்களாவர். எனவே ஆண் தாதியரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு 31,535 பேர் தாதியர் சேவையில் இருந்தனர் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார பெண் தாதியர் 258 பேர் சேவையில் இருந்தனர். கடந்த 20 வருடங்களாக செயற்பாடற்றிருந்த பொது சுகாதார சேவையை மீண்டும் இயங்குநிலைக்கு கொண்டுவர தற்போதைய சுகாதார அமைச்சர் பாடுபட்டார் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages